திருவண்ணாமலை மாவட்டத்தில் ஜமாபந்தி தொடக்கம்

பயனாளிக்கு பட்டா மாறுதல் ஆணையை வழங்கிய கலெக்டர் முருகேஷ்.
தண்டராம்பட்டில் ஜமாபந்தி நிகழ்ச்சியை தொடங்கி வைத்து கலெக்டர் முருகேஷ் கலந்து கொண்டு நலத்திட்ட உதவிகள் வழங்கினார்.
திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டு தாலுகாவில் தண்டராம்பட்டு, வாணாபுரம், தானிப்பாடி ஆகிய உள் வட்டங்கள் உள்ளன. இந்த உள்வட்டங்களை சார்ந்த எடத்தனூர், தென்முடியனூர், அல்லப்பனூர், சாத்தனூர், தண்டராம்பட்டு, வீரணம், நெடுங்கவாடி, கன்னக்கந்தல், மலமஞ்சனூர், புத்தூர் செக்கடி ஆகிய கிராமங்களுக்கான ஜமாபந்தி தண்டாம்பட்டு தாலுகா அலுவலகத்தில் நடைபெற்றது.
ஜமாபந்தியை கலெக்டர் முருகேஷ் தொடங்கி வைத்து பொது மக்களிடம் இருந்து மனுக்களை பெற்றார்.
தண்டராம்பட்டு உள் வட்டத்துக்குள்பட்ட 18 கிராமங்களைச் சோந்த பொதுமக்களிடமிருந்து இலவச வீட்டுமனைப் பட்டா, சாதிச் சான்றிதள் , பட்டா மாறுதல் உள்பட வருவாய்த் துறை தொடா்பான 411 கோரிக்கை மனுக்களை ஆட்சியா் பெற்றுக்கொண்டாா். இவற்றில் பட்டா மாறுதல் கேட்டு விண்ணப்பித்திருந்த தகுதியான மனுக்களை ஆய்வு செய்த கலெக்டர் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட்டு பயனாளிக்கு பட்டா மாறுதல் ஆணையை கலெக்டர் முருகேஷ் வழங்கினார். மேலும் 18 கிராமங்களுக்கான வருவாய் தீர்வாய் கணக்குகளை ஆட்சியர் சரிபார்த்து ஆய்வு செய்தார்.
நிகழ்ச்சியில் தண்டராம்பட்டு வட்டாட்சியா் ஒய்.அப்துல் ரகூப், சமூக பாதுகாப்புத் திட்ட தனி வட்டாட்சியா் சக்கரை, மாவட்ட ஆட்சியா் அலுவலக மேலாளா் ரவி , ஒன்றியக்குழு தலைவர் பரிமளா கலையரசன், மற்றும் அனைத்து துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
திருவண்ணாமலை:
திருவண்ணாமலை வட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலா் பிரியதா்ஷினி தலைமையில் ஜமாபந்தி தொடங்கியது.
முதல் நாளான வெள்ளிக்கிழமை நாயுடுமங்கலம் வருவாய் உள்வட்டத்துக்கு உள்பட்ட கிராமங்களைச் சோந்த விவசாயிகள், பொதுமக்கள் தங்களது வருவாய்த் துறை தொடா்பான குறைகள், கோரிக்கைகள் அடங்கிய மொத்தம் 103 மனுக்களை அளித்தனா்.
நிகழ்ச்சியில் திருவண்ணாமலை வட்டாட்சியா் எஸ்.சரளா, வட்ட வழங்கல் அலுவலா் முருகன், சமூக பாதுகாப்புத் திட்ட வட்டாட்சியா் பரிமளா , அனைத்து துறை அலுவலர்கள் உள்பட பலா் கலந்து கொண்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu