தண்டராம்பட்டு ஊராட்சியில் புதிய குளம் அமைக்கும் பணி ஆட்சியர் ஆய்வு..!

தண்டராம்பட்டு ஊராட்சியில் புதிய குளம் அமைக்கும் பணி ஆட்சியர் ஆய்வு..!
X

புதிய குளம் அமைக்கும்  பணி நடைபெற்று வருவதை ஆய்வு மேற்கொண்ட மாவட்ட ஆட்சியர்

தண்டராம்பட்டு ஊராட்சியில் நடைபெற்று வரும் புதிய குளம் அமைக்கும் பணி மாவட்ட ஆட்சியர் ஆய்வு மேற்கொண்டார்

திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டு ஊராட்சி ஒன்றியம் வானபுரம் ஊராட்சியில் குங்கில்நத்தம் கிராமத்தில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் புதிய குளம் அமைத்தல் பணி நடைபெற்று வருவதை திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

அதனைத் தொடர்ந்து பாணாபுரம் ஊராட்சியில் நடைபெற்று வரும் மக்களுடன் முதல்வர் முகாமில் மருத்துவ காப்பீட்டு வேண்டி மனு அளித்தவர்களுக்கு உடனடியாக தீர்வு காணப்பட்டு மருத்துவ காப்பீட்டு சான்றிதழ்களை பயனாளிகளுக்கு மாவட்ட ஆட்சியர் வழங்கினார்.

மாவட்ட விவசாயிகள் சங்கத்தினர் அளித்த கோரிக்கை மனு

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியனை நேரில் சந்தித்து தமிழக விவசாயிகள் சங்க மாவட்ட தலைவர் கார்கோணம் சந்திரசேகரன் விவசாய சங்க பிரதிநிதி வெள்ளைக்கண்ணு, ஊராட்சி மன்ற தலைவர்கள் ஆகியோர் மனு அளித்தனர்.

அந்த மனுவில் திருவண்ணாமலை வட்டம் நாயுடுமங்கலம் உள்வட்டத்துக்குட்பட்ட கிராமங்களில் வசித்துவருகிறோம். எங்களின் பிரதான தொழில் கரும்பு விவசாயம். தற்போது எங்களது கிராமங்கள் சர்க்கரைத்துறை ஆணையர் உத்தரவுப்படி பண்ணாரி அம்மன் சக்கரை ஆலை கொழுந்தம்பட்டில் கரும்பு பதிவு செய்து வருகிறோம்.

பண்ணாரிஅம்மன் சர்க்கரை ஆலை நிர்வாகம் கரும்பு பதிவு செய்து உரிய நேரத்தில் ஆலை அரவைக்கு வெட்டி எடுக்கப்பட்டு சரியான முறையில் பணம் பட்டுவாடா செய்து வருகின்றது. எனவே நாயுடுமங்கலம் பிர்கா அருணாச்சலா சர்க்கரை ஆலைக்கு உட்பட்ட பகுதியாகும். இந்த சர்க்கரை ஆலை இயங்காத காரணத்தினால் தரணி சர்க்கரை ஆலை போளூருக்கு தற்காலிகமாக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஒதுக்கிய நாட்களிலிருந்து சரியான முறையில் வெட்டு உத்தரவு வழங்கவில்லை. இதனால் பல விவசாயிகள் மன உளைச்சலுக்கு ஆளாகி கரும்பு தீயிட்டு கொளுத்திவிட்டனர்.

விவசாயிகள் ஆலைக்கு அனுப்பிய கரும்புக்கு கடந்த 6 ஆண்டுகளாக கரும்பு பணம் பட்டுவாடாசெய்யவில்லை. தரணி சர்க்கரை ஆலையும் இயங்கவில்லை இதனால் மூலம் விவசாயிகள் வங்கியில் கரும்பு பயிர்கடன் அடையாமல் நிலுவையில் உள்ளது. இதனால் விவசாயிகள் வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து நாயுடுமங்கலம் பிர்காவை சர்க்கரை துறை ஆணையர் உத்தரவுப்படி அருணாச்சலா சர்க்கரை ஆலை இயங்கும் வரை பண்ணாரி அம்மன் சக்கரை ஆலை கொழுந்தம்பட்டுக்கு நாயுடுமங்கலம் பிர்காவை நிரந்தரமாக ஒதுக்கப்பட்டுள்ளது

எனவே நாயுடுமங்கலம் பிர்காவை இனிவரும் காலங்களில் பண்ணாரிஅம்மன் சர்க்கரை ஆலைக்கு எந்தவித தடையின்றி நிரந்தரமாக கரும்பு பதிவு மற்றும் சப்ளை செய்யநடவடிக்கை எடுக்க வேண்டும் . இவ்வாறு அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மனுவை பெற்றுக்கொண்ட ஆட்சியர் விவசாய சங்க நிர்வாகிகள் கோரிக்கைகளை ஏற்று நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

இந்நிகழ்வின் போது மாநில தடகள சங்க துணைத் தலைவர் எ.வ.வே. கம்பன், வேளாண்மை துறை அதிகாரிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள், வருவாய் துறை அலுவலர்கள் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

Tags

Next Story
டெல்லி டூ அமெரிக்கா அரை மணி நேரத்துலயா? என்னப்பா சொல்ற எலான் மஸ்க்..! | Delhi to America Flight Timings