சுதந்திர தின விழா சிறப்பு ரத்த தான முகாம்
சிறப்பு ரத்ததான முகாமினை தொடங்கி வைத்த கிரி எம் எல் ஏ
திருவண்ணாமலை மாவட்டம் செங்கத்தில் 78 ஆம் ஆண்டு சுதந்திர தின விழாவை முன்னிட்டு நடைபெற்ற மாபெரும் ரத்ததான முகாமினை செங்கம் சட்டமன்ற உறுப்பினர் கிரி தொடங்கி வைத்தார்.
திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் விவேகானந்தா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மற்றும் திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை இணைந்து 78 ஆம் ஆண்டு சுதந்திர தின விழாவை முன்னிட்டு மாபெரும் ரத்ததான முகாம் நடைபெற்றது.
திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவர் அரிகரன், பள்ளி தலைவர் குலோத்துங்க சோழன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட செங்கம் சட்டமன்ற உறுப்பினர் கிரி முகாமினை துவக்கி வைத்து பேசுகையில்,
ரத்தம் கொடுக்கும் ஒவ்வொருவரும் குறைந்தது 45 கிலோ எடை கொண்டவராக இருக்க வேண்டும். 18 வயது பூர்த்தியானவராக இருக்க வேண்டும். ஹீமோகுளோபின் அளவு 11 சதவீதத்திற்கு மேல் இருக்க வேண்டும். மூன்று மாதத்திற்கு ஒருமுறை மட்டுமே ரத்தம் கொடுப்பது நல்லது. உலகத்தில் மனிதனால் செயற்கையாக உருவாக்க முடியாத ஒரு பொருள் ரத்தம் மட்டுமே, ரத்தம் சாதி மத இன வேறுபாடுகளைக் கடந்து ஒரு பொக்கிஷமாக ரத்தம் இருக்கின்றது.. ரத்தம் பணக்காரன் ஏழை என்று பாராமல் நோய்வாய் பட்டவர்கள் அனைவரும் தாங்கள் கொடுக்கும் ரத்தம் உதவியாக இருக்கிறது.
ஒரு மனிதன் வாழ வேண்டும் என்றால் ரத்தம் பிரதான தேவையாக உள்ளது . உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை போன்ற எண்ணற்ற உயர்ரக சிகிச்சைகளுக்கு ரத்தம் பிரதான தேவையானதாக உள்ளது என செங்கம் சட்டமன்ற உறுப்பினர் கிரி பேசினார்.
அதனைத் தொடர்ந்து திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வர் ஹரிகரன் ரத்தம் வழங்கும் இளைஞர்களுக்கும் பொதுமக்களுக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் ரத்தம் வழங்கினார்.
இம்மு முகாமில் 50க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு தனது ரத்தங்களை தானமாக வழங்கினார்கள் . இதில் சுமார் 50 யூனிட்டுக்கு மேல் ரத்த வங்கிக்கு ரத்தம் வழங்கியது குறிப்பிடத்தக்கது. ரத்தம் வழங்கிய 50க்கும் மேற்பட்டவர்களுக்கு ரத்தம் வழங்கியதற்கான சான்றுகளும் பாராட்டு சான்றிதழ்களும் வழங்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் பேரூராட்சி தலைவர் சாதிக் பாஷா ,செங்கம் கிழக்கு ஒன்றிய செயலாளர் செந்தில்குமார், கூட்டுறவு சங்கத்தை செயலர் முருகன், உள்ளிட்ட திமுக நிர்வாகிகள், ஆசிரியர்கள், மருத்துவர்கள் ,செவிலியர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu