சாத்தனூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு
சாத்தனூர் அணை
திருவண்ணாமலை மாவட்டத்தில் கடந்த சில தினங்களாகப் பெய்து வரும் வடகிழக்கு பருவ மழையால், அணைகளின் நீா்மட்டம் உயரத் தொடங்கியுள்ளது.
தற்போது பருவமழை ஆரம்பமாகியுள்ள நிலையில் திருவண்ணாமலை மாவட்டத்திற்கு ஆரஞ்சு அலார்ட் விடுக்கப்பட்டு மிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்த நிலையில், திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப்பகுதிகள் மற்றும் தென்பெண்ணை ஆற்றங்கரையோரப்பகுதியில் பெய்து வரும் மழையால் சாத்தனூர் அணைக்கு நீர் வரத்து அதிகரித்துள்ளது. தற்போது நீர்வரத்து 1260 கன அடி தண்ணீராக உள்ளது. சாத்தனூர் அணையின் முழு கொள்ளளவான 119 அடி என்ற நிலையில் தற்போது 98.35 அடி தண்ணீர் நிரம்பியுள்ளது.
மேலும் சாத்தனூர் அணைக்கு தொடர்ந்து நீர் வரத்து அதிகரித்தால் அணையின் பாதுகாப்பு கருதி தண்ணீ ர் வெளியேற்றப்படும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
இதேபோன்று செங்கம் ஜவ்வாது மலையின் அடிவாரத்தில் பெய்து வரும் மழையின் காரணமாக, செய்யாற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள குப்பநத்தம் அணைக்கு நீர் வரத்து அதிகரித்துள்ளது. தற்போது நீர்வரத்து 55 கன அடி தண்ணீர் வரத்து உள்ளது. அதன் முழு கொள்ள ளவான 59 அடியிலிருந்து தற்போது 54 அடி உள்ளதால் அணையின் பாதுகாப்பு கருதி 85 கன அடி தண்ணீர் வெளியேற்றுப்பட்டு வருகிறது.
தொடர்ந்து வரும் மழையால் குப்பநத்தம் அணையின் நீர்மட்டத்தை கண்காணிக்கப்பட்டு வருகிறது. மலைப்பகுதிகளில் திடீரென வெள்ளப்பெருக்கு ஏற்பட்டால் எந்நேரத்திலும் அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்படும் என்பதால் பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் எனவும் அதிகாரிகளால் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
22.97 அடி உயரம் கொண்ட மிருகண்டா நதி அணையில், நீா்மட்டம் 18.37 அடியாகவும், 62.32 அடி உயரம் கொண்ட செண்பகத்தோப்பு அணையில் நீா்மட்டம் 56.25 அடியாகவும் உள்ளது.
தொடா்ந்து, 4 அணைகளின் நீா்மட்டமும் படிப்படியாக உயா்ந்து வருவதால் விவசாயிகள், பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனா்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu