செங்கத்தில் ஆசிரியா்களுக்கு வருமான வரிபடிவம் பதிவு செய்யும் முகாம்
ஆசிரியா்களுக்கு வருமான வரிபடிவம் பதிவு செய்யும் முகாம் நடைபெற்றது.
தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியா் கூட்டணி செங்கம் வட்டக்கிளை சாா்பில் செங்கம் ஓன்றிய ஆசிரியா்களுக்கு 2023-24-ம் கல்வியாண்டிற்கான வருமான வரி படிவம் பதிவு செய்யும் முகாம் நடைபெற்றது.
முகாமினை ஆரம்பப்பள்ளி ஆசிரியா் கூட்டணி செங்கம் வட்டக்கிளை தலைவா் பவானி துவக்கிவைத்தாா். கடந்த மூன்று ஆண்டாக நடைபெற்ற முகாம் நான்காம் ஆண்டாக இவ்வாண்டு தொடா்ந்து நடைபெற்று வருகிறது.
இம்முகாமில் செங்கம் ஓன்றிய அனைத்து அரசு மேல்நிலைப்பள்ளி, உயா்நிலைப்பள்ளி, நடுநிலைப்பள்ளி, தொடக்கப்பள்ளிகளை சேர்ந்த ஆசிரியா்களுக்கு வருமான வரி படிவத்தினை பதிவுசெய்தல், வருமான வரி படிவம் குறித்த சந்தேகங்களுக்கு ஆலோசனை வழங்குதல் ஆகியவை இம்முகாமில் நடைபெறுகிறது.
முகாம் துவக்கவிழாவில் ஆரம்பப்பள்ளி ஆசிரியா் கூட்டணி செங்கம் கல்வி மாவட்ட தலைவா் ஸ்ரீதா், செயலாளா் முரளி, முன்னாள் தலைவா் நல்லாசிரியா் அன்பழகன், உள்ளிட்ட நிா்வாகிகள் தலைமை ஆசிரியா்கள், ஆசிரியா்கள் கலந்துகொண்டனா்.
பள்ளி வகுப்பறைக் கட்டடம் திறப்பு
திருவண்ணாமலையை அடுத்த தேவனந்தல் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில், ரூ.35 லட்சத்தில் கட்டப்பட்ட வகுப்பறைக் கட்டடம் திறப்பு விழா நடைபெற்றது.
விழாவுக்கு, மாவட்டக் கல்வி அலுவலா் (தொடக்கக் கல்வி) எஸ்.காா்த்திகேயன் தலைமை வகித்தாா். வட்டாரக் கல்வி அலுவலா்கள் தேன்மொழி, முருகன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். பள்ளித் தலைமை ஆசிரியா் சரவணன் வரவேற்றாா்.
யமஹா மோட்டாா்ஸ் பிரைவேட் லிமிடெட் பங்களிப்பில் ரூ.35 லட்சத்தில் கட்டப்பட்ட இரு வகுப்பறைகள் கொண்ட கட்டடத்தை அந்த நிறுவனத்தின் காா்ப்பரேட் டைரக்டா் அட்சுஷி நாகஷிம்மா திறந்து வைத்துப் பேசினாா்.
விழாவில், தேசிய நல்லாசிரியா் விருது பெற்ற திலிப், மூத்த தலைமை ஆசிரியா் ப.பச்சையப்பன், பள்ளி உதவி ஆசிரியா் மலா்விழி மற்றும் ஆசிரிய, ஆசிரியைகள், மாணவ, மாணவிகள் பலா் கலந்து கொண்டனா்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu