பனைஓலைபாடி அரசு மேல்நிலைப் பள்ளியில் வரலாற்று மன்றம் தொடக்க விழா

அரசு மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற வரலாற்று மன்றம் தொடக்க விழா.
திருவண்ணாமலை பனை ஓலை பாடி அரசு மேல்நிலைப் பள்ளியில் வரலாற்று மன்றம் தொடக்க விழா நடைபெற்றது. பள்ளியின் தலைமை ஆசிரியர் கோடீஸ்வரன் தலைமை வகித்தார்.
சமூக அறிவியல் ஆசிரியர் முருகன் மற்றும் விஜயன் வரவேற்புரை நிகழ்த்தினார்கள். உதவி தலைமை ஆசிரியர் சாம்ராஜ் சிவக்குமார் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள்.
பள்ளியின் தலைமை ஆசிரியர் கோடீஸ்வரன், தலைமை வகித்து பேசுகையில் , வரலாறு ஒரு வற்றாத தகவல் களஞ்சியம். மனித ஆற்றல்கள்,அனுபவங்கள் ஆகியவற்றின் சுரங்கமாகும். செயல்படும் எண்ணற்ற குண நலன்களின் படக் காட்சியாக வரலாறு அமைகிறது. இத்தகைய வரலாற்றுப் படிப்பு நம் மனத்தை விாிவடையச் செய்கிறது என கூறினார்.
முதுகலை ஆசிரியர் (பொருளியல்) பலராமன் அவர்களும், பட்டதாரி ஆசிரியர் (அறிவியல்) பிரபு அவர்களும், வணிகவியல் ஆசிரியர் வெங்கடேசன் அவர்களும், தமிழ் ஆசிரியர் மோகன்தாஸ் அவர்களும் , இளங்கோவன் தமிழ் ஆசிரியர் அவர்களும், பார்த்திபன் இடைநிலை ஆசிரியர் அவர்களும், மாணவர்களுக்கு தனித்தனி தலைப்புகளின் கீழ் சிறப்புரையாற்றினார்கள்.
மாணவ மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. முதுகலை ஆசிரியர் அகத்தியன் நன்றியுரை கூற விழா இனிதே நிறைவு பெற்றது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu