தென்பெண்ணை ஆற்றில் உயர்மட்ட பாலம் திறப்பு
உயர்மட்ட பாலத்தை அமைச்சர் திறந்து வைத்தார்.
திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டு அருகே ரூ.16 கோடியில் கட்டப்பட்ட உயா்மட்ட பாலத்தை அமைச்சா் எ.வ.வேலு திறந்து வைத்தாா்.
திருவண்ணாமலை மாவட்டம் சாத்தனூர் அணையில் இருந்து பாசனத்திற்காக ஆண்டிற்கு வரும் 90 நாட்கள் முதல் 100 நாட்கள் வரை தென்பெண்ணை ஆற்றில் தண்ணீர் திறந்து விடப்படும். அப்போது அகரம் பள்ளிப்பட்டு பகுதி மக்கள் தென்பெண்ணை ஆற்றை கடந்து செல்லும் முடியாத நிலை ஏற்படும்.
தென்பெண்ணை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்படும்போது அகரம் பள்ளிப்பட்டு தரை பாலத்தில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடும். இதனால் மாத கணக்கில் இந்த பகுதியை கடந்து செல்ல முடியாது . மாற்று வழியாக சுமார் 15 கிலோமீட்டர் சுற்றிக்கொண்டு தான் மற்ற ஊர்களுக்கு பொதுமக்கள் செல்ல வேண்டும். எனவே எங்களுக்கு உயர்மட்ட பாலம் அமைத்து தரவேண்டும், என இப்பகுதி மக்கள் நீண்ட நாட்களாக கோரிக்கை வைத்து வந்தனர். அவர்களின் கோரிக்கையை ஏற்று செங்கம் சட்டமன்ற உறுப்பினர் கிரி பரிந்துரையின் படி, பொது பணித்துறை அமைச்சர் வேலு அவர்கள் முயற்சியால் உயர்மட்ட பாலம் கட்டும் பணி நடைபெற்று வந்தது .அப்பணிகள் நிறைவுற்று இத திறப்பு விழா நடைபெற்றது.
விழாவுக்கு, சட்டப்பேரவை துணைத் தலைவா் கு.பிச்சாண்டி தலைமை வகித்தாா். மாவட்ட ஆட்சியா் பாஸ்கர பாண்டியன், செங்கம் எம் எல் ஏ கிரி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
அமைச்சா் எ.வ.வேலு சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டு உயா்மட்ட பாலத்தை திறந்துவைத்தாா். அப்போது நிகழ்ச்சியில் அவர் பேசுகையில், நான் வாக்கு சேகரிக்க தென்பெண்ணை ஆற்றில் இடுப்பளவு தண்ணீரில் இப்பகுதிக்கு ஒருமுறை வந்தேன் . ஒரு நாள் ஓட்டு கேட்பதற்கு நான் இடுப்பளவு தண்ணீரில் நடந்து சென்றேன். நான் ஒருவன் கஷ்டப்பட்டேன் என்றால் இப்பகுதி மக்கள் எவ்வளவு கஷ்டப்பட்டு இருப்பார்கள்.
எனவே உடனடியாக இந்த உயர்மட்ட பாலத்தை உங்களுக்கு கட்டித் தர வேண்டும் என்பதற்காக பணிகள் நடைபெற்று தற்போது பயன்பாட்டிற்கு வந்துள்ளது.
மகளிர்க்கு மாதம் தோறும் ரூபாய் ஆயிரம், வேறு எந்த மாநிலத்திலும் இல்லாத வகையில் தமிழ்நாட்டில் பள்ளி மாணவர்களுக்கு காலை உணவு திட்டம் என பல்வேறு திட்டங்களை தமிழகம் முதல்வர் சிறப்பாக செயல்படுத்தி வருகிறார். நமக்குப் பல்வேறு திட்டங்களை தருகிற தமிழக அரசு தேர்தல் நேரத்தில் அந்த நன்றி உணர்வை நீங்கள் எல்லாம் காட்ட வேண்டும், இந்த உயர்மட்ட பாலத்தின் காரணமாக அகரம் பள்ளிப்பட்டு,தண்டராம்பட்டு, எடத்தனூர், அகரம் பள்ளிப்பட்டு தொண்டமானூர் , தென் முடியனூர், இளையாங்கன்னி, பெருந்துறை பட்டு உள்ளிட்ட 16 கிராமங்களை சேர்ந்த 2 லட்சம் பொதுமக்கள் பயனடைவார்கள் என அமைச்சர் பேசினார்.
விழாவில், மாவட்ட வருவாய் அலுவலா் இராம்பிரதீபன், திருவண்ணாமலை நாடாளுமன்ற உறுப்பினர் அண்ணாதுரை, மாநில தடகள சங்கத் துணைத் தலைவர் கம்பன், கலசப்பாக்கம் சட்டமன்ற உறுப்பினர் சரவணன், ஒன்றிய குழு தலைவர் பரிமளா கலையரசன் மற்றும் மக்கள் பிரதிநிதிகள், உள்ளாட்சிப் பிரதிநிதிகள், அரசு அதிகாரிகள், பொதுமக்கள் உள்பட பலா் கலந்து கொண்டனா்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu