செங்கத்தில் மக்களுடன் முதல்வர் திட்ட முகாம் துவக்கம்

செங்கத்தில் மக்களுடன் முதல்வர் திட்ட முகாம் துவக்கம்

மக்களுடன் முதல்வர் திட்ட விழாவினை தொடங்கி வைத்து பேசிய மாவட்ட ஆட்சியர்

செங்கம் ஊராட்சியில் மக்களுடன் முதல்வர் திட்டத்தினை ஆட்சியர் மற்றும் எம்எல்ஏ தொடங்கி வைத்தனர்.

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் தொகுதியில் செங்கம் ஒன்றியத்துக்கு உட்பட்ட மண்டலம் இரண்டில் உள்ள ஊராட்சிகளுக்கான மக்களுடன் முதல்வர் திட்டத்தினை திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் மற்றும் செங்கம் சட்டமன்ற உறுப்பினர் கிரி ஆகியோர் கலந்து கொண்டு துவக்கி வைத்தார்கள்.

இதில் மேல் செங்கம் உள்ளிட்ட ஊராட்சிகள் பகுதிகளில் இருந்து சுமார் 700 க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டு தங்களது குறைகளை மனுக்களாக அளித்தனர். நிகழ்ச்சியில் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியர் மற்றும் எம்எல்ஏ வழங்கினார்கள்.

இதில் வட்டாட்சியர் முருகன், செங்கம் மேற்கு ஒன்றிய செயலாளர் மனோகரன், ஒன்றிய குழு தலைவர் விஜயராணி குமார், மாவட்ட கவுன்சிலர்கள், ஊராட்சி மன்ற தலைவர்கள், அரசு அலுவலர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

அதனைத் தொடர்ந்து தண்டராம்பட்டு ஒன்றிய ஊராட்சிகளுக்கு நடைபெற்ற மக்களுடன் முதல்வர் திட்ட முகாமை மு.பெ. கிரி எம். எல்.ஏ. தொடங்கி வைத்தார். செங்கம் தொகுதி, தண்டராம்பட்டு ஒன்றியத்தில் மோத்தக்கல் ஊராட்சியில் மக்களுடன் முதல்வர் திட்டத்தின் மண்டலம்- 3ல் உள்ள ரெட்டியார் பாளையம், மலையனூர் செக்கடி, மேல்பாச்சார், ஆத்திப்பாடி புதூர்செக்கடி ஆகிய ஊராட்சிகளுக்கான முகாம் நடைபெற்றது.

செங்கம் சட்டமன்ற உறுப்பினர் கிரி , குத்துவிளக்கு ஏற்றி தொடங்கி வைத்து உரையாற்றினார். இதில், ஒன்றிய கழக செயலாளர் பன்னீர்செல்வம் , ஒன்றிய குழு தலைவர் பரிமளாகலையரசன், மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு அணி அமைப்பாளர் பொன்தனுசு, மாவட்ட கவுன்சிலர் முத்துமாறன், ஒன்றிய துணை செயலாளர் பூபதி, மாவட்ட பிரதிநிதி ஏழுமலை, ஒன்றிய குழு துணை தலைவர் பூங்கொடிநல்லதம்பி, ஊராட்சி மன்ற தலைவர்கள் அன்பரசு, துக்காராமன், அமைப்பாளர்கள் வசந்த், நீலகண்டன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

புதிய மின் கம்ப தெரு விளக்குகளை சிறந்து வைத்த எம்எல்ஏ

தண்டராம்பட்டு ஒன்றியத்தில் புதிய மின் கம்பர் தெரு விளக்குகளை மக்கள் பயன்பாட்டிற்கு செங்கம் சட்டமன்ற உறுப்பினர் கிரி தொடங்கி வைத்தார்.

செங்கம் தொகுதி தண்டராம்பட்டு ஒன்றியம் தா வேலூர் ஊராட்சிக்கு உட்பட்ட மோட்டூர் பகுதியில் புதியதாக நிறுவப்பட்டுள்ள புதிய மின் கம்ப தெரு விளக்குகளை செங்கம் சட்டமன்ற உறுப்பினர் கிரி மக்கள் பயன்பாட்டிற்காக தொடங்கி வைத்தார். மேலும் புதியதாக போடப்பட்ட சாலையினை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

இந்நிகழ்ச்சியில் ஒன்றிய செயலாளர் பன்னீர்செல்வம், பொதுக்குழு உறுப்பினர்கள், மாவட்ட கவுன்சிலர்கள் ,உள்ளாட்சி பிரதிநிதிகள், உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர்.

Tags

Next Story