ஆதிதிராவிடர் நலத் தொடக்கப் பள்ளிக்கு புதிய கட்டிடம் துவக்க விழா
கூடுதல் பள்ளி கட்டிடம் கட்டும் பணியை துவக்கி வைத்த கிரி எம் எல் ஏ
செங்கம் அருகே ஆதிதிராவிடர் நலத் தொடக்கப் பள்ளிக்கு ரூபாய் 33 லட்சத்தில் புதிய கட்டிடம் கட்டுவதற்கான பணிகளை செங்கம் எம் எல் ஏ கிரி துவக்கி வைத்தார்.
திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த ஆண்டிப்பட்டி பகுதியில் ஆதிதிராவிடர் நல தொடக்கப்பள்ளி செயல்பட்டு வந்தது. பழைய கட்டிடம் என்பதால் கடந்த 2019 ஆம் ஆண்டு அப்பள்ளி கட்டிடம் இடிக்கப்பட்டது.
இந்நிலையில் செங்கம் சட்டமன்ற உறுப்பினர் கிரிக்கு அப்பகுதி மக்கள் ஆதிதிராவிடர் நலப் பள்ளிக்கு மீண்டும் அதே இடத்தில் கட்டிடம் கட்டித் தர வேண்டும் என கோரிக்கை வைத்தனர். அதனை ஏற்ற செங்கம் சட்டமன்ற உறுப்பினர் கிரி , தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் மற்றும் தமிழக பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சர் வேலு, ஆகியோரிடம் விடுத்த கோரிக்கையின் அடிப்படையில் பள்ளிக்கு ரூபாய் 33 லட்சத்தில் இரண்டு வகுப்பறைகள் கொண்ட ஸ்மார்ட் கிளாஸ் உடன் கூடிய புதிய பள்ளி கட்டிடம் அமைப்பதற்கு ஆணை பிறப்பிக்கப்பட்டது.
அதைத்தொடர்ந்து புதிய பள்ளி கட்டிடம் கட்டும் பணி தொடக்க விழா நடைபெற்றது.
இவ்விழாவில் சிறப்பு அழைப்பாளராக செங்கம் சட்டமன்ற உறுப்பினர் கிரி கலந்து கொண்டு பூமி பூஜை செய்து அடிக்கல் நாட்டில் பணியை துவக்கி வைத்து பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினார்.
நிகழ்ச்சியில் செங்கம் மேற்கு ஒன்றிய செயலாளர் மனோகரன், மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் செந்தில்குமார், கூட்டுறவு சங்க தலைவர் முருகன், மாவட்ட வர்த்தக அணி அமைப்பாளர் ஸ்ரீதர், ஆசிரியர் ராமன், அரசு ஒப்பந்ததாரர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் ,கல்வித்துறை அதிகாரிகள், ஆதிதிராவிடர் நலத்துறை அதிகாரிகள், ஒன்றிய குழு உறுப்பினர்கள், ஆசிரியர்கள், கிராம பொதுமக்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu