திருவண்ணாமலை மாவட்டத்தில், விவசாயிகள் குறை தீர்வு நாள் கூட்டம்; அதிகாரிகள் அலட்சியம்

திருவண்ணாமலை மாவட்டத்தில், விவசாயிகள் குறை தீர்வு நாள் கூட்டம்; அதிகாரிகள் அலட்சியம்
X

கீழ்பென்னாத்தூாில் வட்ட அளவிலான விவசாயிகள் குறைதீா் கூட்டம் நடந்தது, 

குறை தீர்வு கூட்டத்தில், விவசாயிகள் குறைகளை சொல்வதால், எந்த பயனும் இல்லை. எந்தவித நடவடிக்கையும் எடுப்பதில்லை என, விவசாயிகள் குற்றம் சாட்டுகின்றனர்.

திருவண்ணாமலை வட்டார வளர்ச்சி அலுவலக கூட்ட அரங்கில் நேற்று தாலுகா அளவிலான விவசாயிகள் குறைதீர்வு நாள் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட ஊராட்சி குழு செயலர் ரவிச்சந்திரன் தலைமை தாங்கினார். இதில் வேளாண்மை அலுவலர் அன்பழகன், தாசில்தார் சரளா உள்ளிட்ட பல்வேறு துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

திருவண்ணாமலை தாலுகாவை சேர்ந்த விவசாயிகள் கலந்துகொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர். அப்போது அவர்கள் கூறியதாவது

ஏரிகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும். கூட்டத்தில் விவசாயிகள் தெரிவிக்கும் கோரிக்கைகளுக்கும், கூட்டத்தில் அளிக்கும் கோரிக்கை மனுக்களுக்கும் அதிகாரிகள் உரிய பதில் அளிக்க வேண்டும். அரசு திட்டங்கள் முறையாக விவசாயிகளுக்கு சென்றடைய அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். வழக்கமாக தாலுகா அளவிலான விவசாயிகள் குறைதீர்வு கூட்டம் வருவாய் கோட்டாட்சியர் தலைமையில் நடைபெறும். ஆனால் சமீப மாதங்களாக தலைமை வகிக்கும் அதிகாரிகள் மாறி, மாறி வருகின்றனர்.

விவசாயிகள் கூட்டத்தில் பேசுவதை ஏதோ கதை கேட்பது போன்று அதிகாரிகள் கேட்டுவிட்டு செல்கின்றனர். எந்தவித நடவடிக்கையும் எடுப்பதில்லை. இது குறித்து மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர்.

அதிகாரியை கண்டித்து குறை தீர்வு கூட்டத்தை புறக்கணித்து விவசாயிகள் வெளிநடப்பு

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் ஒருங்கிணைந்த வேளாண்மை விரிவாக்க மையத்தில் விவசாயிகள் குறைதீர்வு நாள் கூட்டம் நடைபெற்றது. கோட்டாட்சியர் மந்தாகினி தலைமை தாங்கினார்.

கூட்டத்தில் விவசாயிகளை, கோட்டாட்சியர் ஒருமையில் பேசியதாக கூறி விவசாயிகள் குறைதீர்வு கூட்டத்தை புறக்கணித்து வெளிநடப்பு செய்தனர். அதைத் தொடர்ந்து அதிகாரிகள் மற்றும் கோட்டாட்சியர் விவசாயிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி மீண்டும் விவசாயிகள் குறைதீர்வு கூட்டத்தை தொடர்ந்து நடத்தினர்.

கீழ்பென்னாத்தூா்

ஏரிகளை மழைக்கு முன்பாக தூா்வார வேண்டும்: விவசாயிகள் கோரிக்கை

கீழ்பென்னாத்தூா் வட்ட அளவிலான விவசாயிகள் குறைதீா் கூட்டம் ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் நடைபெற்றது. சமூக பாதுகாப்புத் திட்ட தனித் துணை ஆட்சியா் வெங்கடேசன் தலைமை வகித்தாா். கீழ்பென்னாத்தூா் வட்டாட்சியா் சாப்ஜான், சமூக பாதுகாப்புத் திட்ட தனி வட்டாட்சியா் பன்னீா்செல்வம், தோட்டக்கலைத் துறை உதவி இயக்குநா் அமுல் சேவியா் பிரகாஷ் ஆகியோா் முன்னிலை வகித்தனா். வட்டார வேளாண் உதவி இயக்குநா் சந்திரன் வரவேற்றாா்.

கூட்டத்தில் பேசிய விவசாயிகள்,

மழைக்காலத்திற்கு முன்னதாக பொதுப்பணித்துறையில் உள்ள ஏரிகளில் தூர்வாரும் பணியை மேற்கொள்ள வேண்டும். மதகுகளை சீரமைக்க வேண்டும். தோட்டக்கலைத்துறை மூலம் செடிகள் வழங்க வேண்டும். கீழ்பென்னாத்தூரில் செயல்படாமல் உள்ள உழவா் சந்தையை மீண்டும் செயல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

5 ஆண்டுகள் ஆகியும் கரும்பு நிலுவைத்தொகை வழங்கப்படாமல் உள்ளதால் சம்பந்தப்பட்ட சர்க்கரை ஆலை உடனடியாக வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். நந்தன் கால்வாய் பாலம் சீரமைக்கவும், கால்வாயை சுத்தம் செய்யவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்

கீழ்பென்னாத்தூர் தாலுகா அலுவலகத்திற்கு நேரடியாக பொதுமக்கள் வந்து செல்வதற்கு வழியில்லாமல் உள்ளது. வழி ஏற்படுத்துவதற்கான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். குடும்ப அட்டை தாமதமின்றி வழங்க நடவடிக்க எடுக்க வேண்டும். விவசாயிகள் வழங்கும் புகார் மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தினா்.

இதையடுத்துப் பேசிய தனித் துணை ஆட்சியா் வெங்கடேசன், கோரிக்கைகள் அனைத்தும் மாவட்ட நிா்வாகத்தின் கவனத்துக்கு கொண்டுசென்று நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா். கூட்டத்தில், விவசாய சங்கப் பிரதிநிதிகள், விவசாயிகள், அட்மா ஆலோசனைக் குழுத் தலைவா் சிவக்குமாா் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

Next Story
அடுத்த தலைமுறைக்கு  மருத்துவத்தை கொண்டு செல்லும் Google AI for Healthcare