ஓடும் ஆம்புலன்சில், 'குவா குவா': தாயும் சேயும் நலம்

ஓடும் ஆம்புலன்சில், குவா குவா: தாயும் சேயும் நலம்
X

ஆம்புலன்சில் பிறந்த அழகான ஆண் குழந்தை.

கலசபாக்கம் அருகே, 108 ஆம்புலன்சில் அழகான ஆண் குழந்தை பிறந்தது.

திருவண்ணாமலை மாவட்டம், கலசபாக்கம் தாலூகா கடலாடி கிராமத்தைச் சேர்ந்த சுரேஷ் என்பவரின் மனைவி ஸ்ரீபிரியா, நிறைமாத கர்ப்பிணியான ஸ்ரீபிரியா, கடலாடி அரசு ஆரம்ப மேம்படுத்தப்பட்ட சுகாதார நிலையத்தில் பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்டு இருந்தார்.

பின்னர் அவர் அங்கிருந்து மேல்சிகிச்சைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு நேற்று மாலை 108 ஆம்புலன்சு மூலம் அழைத்து செல்லப்பட்டார். 108 ஆம்புலன்சில் மருத்துவ உதவியாளர் சந்தோஷ்குமார் மற்றும் டிரைவர் கோபாலசாமி ஆகியோர் பணியாற்றினார். கடலாடி கிராமத்தில் இருந்து காஞ்சி வழியே சென்று கொண்டிருந்த போது ஸ்ரீபிரியாவிற்கு பிரசவ வலி அதிகமானது.

இதையடுத்து 108 ஆம்புலன்சை சாலை ஓரமாக நிறுத்தப்பட்டு மருத்துவ உதவியாளர் சந்தோஷ்குமார் ஸ்ரீபிரியாவிற்கு ஆம்புலன்சிலேயே பிரசவம் பார்த்தார். அதில் ஸ்ரீபிரியாவிற்கு அழகான ஆண் குழந்தை பிறந்தது. பின்னர் தாயும், சேயும் திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். தற்போது தாயும், குழந்தையும் நலமாக உள்ளனர்.

அரசு கலைக்கல்லூரியில் ரத்த தான முகாம்

வந்தவாசியை அடுத்த தென்னாங்கூரில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நாட்டு நலப்பணி திட்டம், செய்யாறு மாவட்ட தலைமை மருத்துவமனை ரத்த வங்கி, இரும்பேடு அரசு ஆரம்ப சுகாதார நிலையம் ஆகியவை சார்பில் ரத்த தான முகாம் நடைபெற்றது.

.கல்லூரி முதல்வர் வெண்ணிலா தலைமை தாங்கி முகாமை தொடங்கி வைத்தார். வந்தவாசி வட்டார மருத்துவ அலுவலர் எம்.ஆர்.ஆனந்தன், இரும்பேடு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ அலுவலர் கவுதம் ஆகியோர் தலைமையிலான மருத்துவ குழுவினர் மாணவர்கள் மற்றும் பேராசிரியர்களிடம் இருந்து 60 யூனிட் ரத்தத்தை தானமாக பெற்றனர்.

Next Story
future ai robot technology