வெடி மருந்து வைத்து வன விலங்குகளை வேட்டையாட முயன்றவர் கைது
கைது செய்யப்பட்ட ஜான்சன்
திருவண்ணாமலை வனச்சரகத்துக்கு உட்பட்ட சொரகொளத்தூர் காப்புக்காடு பகுதியில் வனவிலங்குகளை வேட்டையாட சிலர் செல்வதாக, திருவண்ணாமலை மாவட்ட வன அலுவலர் அருண்லாலுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அவரது உத்தரவின் பேரில் திருவண்ணாமலை வனச்சரக அலுவலர் சீனிவாசன் தலைமையிலான அலுவலர்கள் சொரகொளத்தூர் காப்புக்காடு பகுதியில் ரோந்துப்பணியில் ஈடுபட்டனர்.
அப்போது அந்த பகுதியில் வனவிலங்குகளை வேட்டையாட முயன்ற 2 பேரை வனத்துறையினர் சுற்றி வளைத்தனர். அதில் ஒருவர் தப்பியோடி விட்டார். மற்றொரு பிடிபட்டார். பிடிபட்டவர் வனவிலங்குகளை வேட்டையாட கோழி இறைச்சியில் வெடி மருந்தை வைத்து வேட்டையாட வந்ததாக கூறினார். இதையடுத்து அவர் கைது செய்யப்பட்டார். கைதானவர் திருவண்ணாமலை அருகில் உள்ள கொண்டம் நரிக்குறவர் காலனியை சேர்ந்த ராமு (வயது 28) என்றும், தப்பியோடியவர் அதே பகுதியை சேர்ந்த ஜான்சன் என்றும் தெரியவந்தது.
கைதான ராமுவிடம் இருந்து மோட்டார் சைக்கிள் பறிமுதல் செய்யப்பட்டது. அவர், திருவண்ணாமலை வனச்சரக அலுவலகத்துக்கு அழைத்து செல்லப்பட்டார். அவருக்கு, மாவட்ட வன அலுவலர் அருண்லால் உத்தரவின்படி ரூ.30 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu