திருடனை வீட்டுக்குள் வைத்துபூட்டி போலீசில் ஒப்படைத்த வீட்டு உரிமையாளர்

திருடனை வீட்டுக்குள் வைத்துபூட்டி போலீசில் ஒப்படைத்த  வீட்டு உரிமையாளர்
X

கைது செய்யப்பட்ட அண்ணாமலை.

Police Arrest - வீடு புகுந்து திருடிய வாலிபரை, வீட்டு உரிமையாளர் வீட்டுக்குள் வைத்து பூட்டி போலீசில் ஒப்படைத்தார்.

Police Arrest - வாணாபுரம் அருகே உள்ள பெருந்துறைப்பட்டு மெயின் ரோட்டை சேர்ந்தவர் வெங்கடேஷ் (வயது 50), விவசாயி. வீட்டை பூட்டிவிட்டு தனது விவசாய நிலத்திற்கு சென்றார். பின்பு வீட்டிற்கு வந்து பார்த்தபோது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்த அவர் உள்ளே சென்று பார்த்தபோது மர்ம நபர் ஒருவர் பீரோவை உடைத்து அதில் உள்ள துணிமணிகள் மற்றும் பொருட்களை தேடிக் கொண்டிருந்தார்.

உடனே சுதாரித்துக் கொண்ட வெங்கடேஷ் வீட்டை வெளிப்பக்கமாக பூட்டி விட்டு வாணாபுரம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் வீட்டின் உள்ளே இருந்த நபரை மடக்கி பிடித்து போலீஸ் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். ஆனால் அந்த வாலிபர் அதிகபோதையில் இருந்ததால் அவரை திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

விசாரணையில் அவர் மெய்யூர் கிராமத்தைச் சேர்ந்த மாயவன் மகன் அண்ணாமலை (32) என்பது தெரியவந்தது. இதுகுறித்து போலீசார் கூறுகையில் வெங்கடேசன் மீது திருக்கோவிலூர், மணலூர்பேட்டை, செங்கம், தண்டராம்பட்டு உள்ளிட்ட பகுதிகளில் 10-க்கும்மேற்பட்ட திருட்டு வழக்குவழக்குகளில் தொடர்புடையவர் என்பது தெரியவந்ததுள்ளது.

போதையில் இருப்பதால் அவரை விசாரிக்க முடியவில்லை என்றும், அவர் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டதாகவும், போதை தெளிந்த பிறகே அவரிடம் விசாரணை செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தனர். தொடர்ந்து அதே பகுதியில் திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டவர் அண்ணாமலையா அல்லது அவருடன் வேறு யாராவது திருடுவதற்கு வருகின்றனரா? என்று அப்பகுதி சேர்ந்தவர்கள் சந்தேகிக்கின்றனர்.

அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2


Tags

Next Story
பழனி கோயில் நிர்வாகம் 3,134 மூட்டைகள் கரும்பு சா்க்கரை கொள்முதல் செய்தது