தண்டராம்பட்டில் மாற்றுத் திறனாளிகளுக்கான சிறப்பு மருத்துவ முகாம்

தண்டராம்பட்டில் மாற்றுத் திறனாளிகளுக்கான சிறப்பு  மருத்துவ முகாம்
X

திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டில் நடந்த  மாற்றுத்திறனாளிகளுக்கான மருத்துவ முகாமை அண்ணாதுரை எம்.பி. தொடங்கி வைத்தார்.

தண்டராம்பட்டில் நடந்த மாற்றுத் திறனாளிகளுக்கான மருத்துவ முகாமில் உபகரணங்கள் வழங்குவதற்கான அளவீடுகள் எடுக்கப்பட்டது.

திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டு பகுதியில் உள்ள திருமண மண்டபத்தில் மாற்றுத் திறனாளிகளுக்கான மருத்துவ உபகரணங்களின் அளவீடுகள் மற்றும் பயனாளிகள் தேர்வு செய்யும் சிறப்பு முகாம் நடைபெற்றது.

மாற்றுத்திறனாளிகளுக்கான ஏ.டி.பி.ஐ. திட்டத்தின் கீழ் நடைபெற்ற இந்த சிறப்பு முகாமினை திருவண்ணாமலை எம்பி அண்ணாதுரை இன்று தொடங்கி வைத்து பார்வையிட்டனர்.

உடன் செங்கம் சட்டமன்ற உறுப்பினர் மு.பெ.கிரி , மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் ஜோதிலிங்கம் , தி மு க.ஒன்றிய செயலாளர் பன்னீர்செல்வம், ஒன்றியக்குழு தலைவர் பரிமளா கலையரசன், மற்றும் துறை அலுவலர்கள் , மருத்துவர்கள் கலந்து கொண்டனர்.

தேர்வு செய்யப்பட்ட பயனாளிகளுக்கு 3 சக்கர சைக்கிள்கள் , சிறப்பு சக்கர நாற்காலிகள், மனவளர்ச்சி குன்றிய குழந்தைகளுக்கான கிட், பார்வையற்றோருக்கான ஸ்மார்ட்போன்கள், பேட்டரியால் இயங்கும் 3 சக்கர வண்டிகள் , நவீன செயற்கை கால்கள் ஆகியன 45 நாட்களில் நடவடிக்கை எடுக்கப்பட்டு தகுதியானவர்களுக்கு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது.

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்