செங்கம் ஊராட்சி ஒன்றியத்தில் மாற்றுத்திறனாளிகள் குறைகேட்பு முகாம்

செங்கம் ஊராட்சி ஒன்றியத்தில் மாற்றுத்திறனாளிகள் குறைகேட்பு முகாம்
X

மாற்றுத்திறனாளிகளுக்கு குறைகேட்பு முகாம் செங்கம் ஊராட்சி ஒன்றிய அலுவலக கூட்ட அரங்கில் நடைபெற்றது

செங்கம் ஊராட்சி ஒன்றியத்தில் மாற்றுத்திறனாளிகள் குறைகேட்பு முகாம் நடைபெற்றது.

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் ஊராட்சி ஒன்றியம் அலுவல ஊரக வளர்ச்சி கூட்ட அரங்கில், தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தில், மாற்றுத்திறனாளிகளுக்கான குறைகேட்பு முகாம் நடைபெற்றது. இதற்கு ஆணையாளர் எழிலரசு, திட்ட வட்டார வளர்ச்சி அலுவலர் ரபியுல்லா, துணை வட்டார வளர்ச்சி அலுவலர் அன்பழகன் ஆகியோர்கள் தலைமை தாங்கி, மாற்றுத்திறனாளிகளிடம் குறைகளை கேட்டார்.

மேலும் அவர்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்று கொண்டார். பின்னர் அந்த மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கும்படி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

அப்போது வட்டார வளர்ச்சி அலுவலர் பேசுகையில், தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு மனிதாபிமான அடிப்படையில் வேலை வழங்க வேண்டும். ஒவ்வொரு பகுதியிலும் மாற்றுத்திறனாளிகளை கணக்கெடுத்து, அவர்களின் வாழ்வாதாரத்தை உறுதி செய்யும் வகையில் வேலை வழங்க வேண்டும்.

மேலும் குடியிருப்பு பகுதிக்கு அருகில் எளிதான வேலைகளை வழங்க, அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றார்.

மேலும் இந்த மாற்றுத்திறனாளிகள் குறைவு கூட்டத்தில் ஊராட்சி ஒன்றிய ஆணையாளர்கள் இனிவரும் மாதங்கள் தோறும் மாதத்தில் முதல் இரண்டாவது செவ்வாய்க்கிழமை மற்றும் இரண்டு மாதங்களுக்கு ஒரு முறை மாவட்ட அலுவலக தலைமையில் மாற்றுத்திறனாளிகள் குறைதீர் கூட்டம் நடைபெறுமென தெரிவித்து பேசினார்கள்.

இந்த முகாமில் ஊரக வளர்ச்சித்துறையின் வட்டார வளர்ச்சி அலுவலர்கள், ஊரக வளர்ச்சி முகமை அலுவலர்கள் மற்றும் சுற்றுப்பகுதிகளில் இருந்து மாற்றுத்திறனாளிகள் பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story