செங்கம் அருகே அரசுப் பேருந்து - சொகுசு கார் மோதி கோர விபத்து: 6 பேர் உயிரிழப்பு

செங்கம் அருகே அரசுப் பேருந்து - சொகுசு கார் மோதி கோர விபத்து: 6 பேர் உயிரிழப்பு
X

அரசு பேருந்து -  கார் மோதி கோர விபத்து

திருவண்ணாமலையில் அரசு பேருந்தும், காரும் நேருக்கு நேர் மோதிக் கொண்ட விபத்தில் 6 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருவண்ணாமலையில் நேற்று இரவு அரசு பேருந்தும், காரும் நேருக்கு நேர் மோதிக் கொண்ட விபத்தில் 6 பேர் உயிரிழந்துள்ளனர் .

திருவண்ணாமலை மாவட்டம் மேல் செங்கம் பகுதியில் இருந்து 8 பேர் காரில் பெங்களூரை நோக்கி சென்று கொண்டிருந்தனர். அப்போது பெங்களூரில் இருந்து அரசு பேருந்து ஒன்று திருவண்ணாமலை நோக்கி வந்து கொண்டு இருந்தது. இந்த இரண்டு வாகனங்களும் மேல் கருமாங்குளம் பகுதியில் எதிரே வந்த அரசு பேருந்தின் மீது கார் நேருக்கு நேர் மோதியது. அதில் சம்பவ இடத்திலேயே 5 பேர் உயிரிழந்தனர். படுகாயம் அடைந்த 14 பேர் காவல்துறையினர் மீட்டு திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டு தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இதுகுறித்து தகவல் அறிந்து விரைந்து வந்த மேல் செங்கம் போலீசார் காரில் வந்தவர்கள் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதனிடையே உயிரிழந்தவர்களின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர்.

கடந்த 15ஆம் தேதி செங்கம் அருகே உள்ள பக்கிரி பாளையம் பகுதியில் கார் - லாரி மோதிக்கொண்ட விபத்தில் குழந்தைகள் உட்பட 7 பேர் உயிரிழந்த நிலையில், இன்று செங்கம் பகுதியில் மற்றொரு கோர விபத்து நிகழ்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags

Next Story