கொதிக்கும் நெய் சட்டியில் வெறும் கையால் வடை சுட்டு நேர்த்தி கடன்

கொதிக்கும் நெய் சட்டியில் வெறும் கையால் வடை சுட்ட பக்தர்.
Tiruvannamalai Temple in Tamil -திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் அடுத்த செ.அகரம் கிராமத்தில், ஓட்டேரி காட்டிலுள்ள அய்யனாரப்பன் மற்றும் சந்தியம்மன் கோவிலில் ஆடி மாதத்தில், மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை விழா எடுப்பது வழக்கம்/.
அதன்படி, கொரோனா ஊரடங்கால் கடந்த இரண்டு ஆண்டுகளாக நடத்த வேண்டிய விழா நடத்தப்படாமல், ஐந்து ஆண்டுகளுக்கு பிறகு தற்போது நடத்தப்பட்டது.
இதையொட்டி, அய்யனாராப்பன் மற்றும் சந்தியம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் சிறப்பு பூஜை நடந்தது.தொடர்ந்து, 48 நாட்கள் விரதமிருந்த பெண் பக்தரான சந்தியா, கொதிக்கும் நெய் சட்டியில், வெறும் கையால் வடை சுட்டு, அம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தி வழிபட்டார்.விழாவில் ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.
அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu