செங்கம் அருகே வருமுன் காக்கும் திட்டத்தின் கீழ் இலவச மருத்துவ முகாம்

செங்கம் அருகே வருமுன் காக்கும் திட்டத்தின் கீழ் இலவச மருத்துவ முகாம்
X

செங்கம் அருகே நடந்த இலவச மருத்துவ முகாமில் கர்ப்பிணிகளுக்கு நல திட்ட உதவிகளைசட்டமன்ற உறுப்பினர் கிரி வழங்கினார்.

செங்கம் அருகே ஆரம்ப சுகாதார நிலையத்தில் தமிழக அரசியல் வரும் முன் காப்போம் இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது.

திருவண்ணாமலை மாவட்டம் செங்கத்தை அடுத்த மேல் பென்னாத்தூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில் செ.அகரம் கிராமத்தில் தமிழக அரசின் வருமுன் காப்போம் திட்டத்தின் கீழ் இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில்வட்டார மருத்துவ அலுவலர் சுரேஷ் வரவேற்றார்.

சிறப்பு அழைப்பாளராக செங்கம் சட்டமன்ற உறுப்பினர் மு. பெ. கிரி கலந்து கொண்டு முகாமை தொடங்கி வைத்ததுடன் கர்ப்பிணிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகளையும் வழங்கினார்.

தொடர்ந்து மருத்துவக் குழுவினர் பொதுமக்கள் 700 பேருக்கு பொது மருத்துவம், கண் காது மூக்கு பரிசோதனை, இசிஜி, எக்ஸ்ரே, ரத்த பரிசோதனை உள்ளிட்ட பல்வேறு பரிசோதனைகள் மேற்கொண்டு மருந்து மாத்திரைகளை வழங்கினார்கள்.

நிகழ்ச்சியில் சங்கம் ஒன்றிய தி. மு.க.செயலாளர் ஏழுமலை, நகர செயலாளர் அன்பழகன் ,ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர்கள், செவிலியர்கள் பங்கேற்றனர்.

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்