அரசு மேல்நிலைப்பள்ளி மாணவ மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள்கள்

அரசு மேல்நிலைப்பள்ளி மாணவ மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள்கள்
X

பள்ளி மாணவ மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள்கள் வழங்கிய பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் ஆறுமுகம் 

திருவண்ணாமலையில் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவ மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள்கள் வழங்கப்பட்டது

திருவண்ணாமலை தியாகி அண்ணாமலை பிள்ளை அரசு மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற விழாவில் பள்ளி மாணவ மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

பள்ளிக்கல்வித்துறை சார்பில் தமிழக அரசின் விலை இல்லா சைக்கிள்கள் வழங்கும் நிகழ்ச்சி தியாகி அண்ணாமலை பிள்ளை மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. பள்ளி தலைமை ஆசிரியை ஜெயக்குமாரி தலைமை வகித்தார்.

உதவி தலைமை ஆசிரியர் சண்முகம் அனைவரையும் வரவேற்றார்.

பெற்றோர் ஆசிரியர் கழக பொருளாளர் வெங்கடேசன்., மாணவர் பாதுகாப்பு குழு ஒருங்கிணைப்பாளர் வேல்முருகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் ஆறுமுகம் கலந்து கொண்டு விலையில்லா சைக்கிள்களை மாணவ மாணவிகளுக்கு வழங்கி சிறப்புரையாற்றினார்.

தொடர்ந்து உலக சிக்கன நாளினை முன்னிட்டு சிக்கனம் மற்றும் சேமிக்கும் பண்பினை வளர்க்கும் பொருட்டு மாவட்ட அளவிலான பேச்சுப் போட்டியில் அப்பள்ளியை சேர்ந்த மாணவி ராஜலஷ்மி பங்கேற்று முதல் பரிசு பெற்றார். அம்மாணவியை பாராட்டி சான்றுகள் மற்றும் பரிசினை பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் ஆறுமுகம் வழங்கினார்

நிகழ்ச்சியில் ஆசிரியர்கள் பாலசுப்பிரமணியன், முத்து கணேசன், முதுகலை ஆசிரியர்கள் சதீஷ்குமார் ,மகேஸ்வரி ,சைலஜா, கலைச்செல்வி, செல்வக் குமாரி, ரவிச்சந்திரன், உள்ளிட்ட ஆசிரியர்கள், பெற்றோர் ஆசிரியர் சங்க உறுப்பினர்கள், பெற்றோர்கள், மாணவ மாணவியர்கள் கலந்து கொண்டனர்.

செங்கம்

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த மேல் பள்ளிப்பட்டு அரசு ஆண்கள் மற்றும் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பயின்று வரும் 200 மாணவ மாணவிகளுக்கு தமிழக அரசின் விலையில்லா சைக்கிள்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட செங்கம் சட்டமன்ற உறுப்பினர் கிரி மாணவ மாணவிகளுக்கு சைக்கிள்களை வழங்கி சிறப்புரையாற்றினார்.

நிகழ்ச்சியில் ஒன்றிய செயலாளர் மனோகரன், செந்தில்குமார், மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர்கள், பெற்றோர் ஆசிரியர் சங்க தலைவர் மற்றும் உறுப்பினர்கள், மேலாண்மை குழு தலைவர் மற்றும் உறுப்பினர்கள் , உள்ளாட்சி பிரதிநிதிகள், ஆசிரியர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
மக்களே உஷார் ....! மழைக்காலத்துல பல நோய்கள் வருதாம் !... அத எதிர்கொள்ள உங்களுக்காக சில டிப்ஸ்....