காட்டாற்று வெள்ளத்தில் சிக்கிய 50 பேர் மீட்பு

காட்டாற்று வெள்ளத்தில் சிக்கிய 50 பேர் மீட்பு
X

கோப்புப்படம் 

செங்கம் அருகே காட்டாற்று வெள்ளத்தில் சிக்கிய 50 பேரை தீயணைப்பு துறையினர் மீட்டனர்.

திருவண்ணாமலை மாவட்டம் செங்கத்தை அடுத்துள்ள துரிஞ்சிகுப்பம் அருகே உள்ள மலைப்பகுதியில் நாமக்கல் நீர்வீழ்ச்சி அமைந்துள்ளது. இங்கு கடந்த சில தினங்களாக பெய்து வரும் மழையின் காரணமாக நீர் வரத்து அதிகமாக உள்ளது.

தீபாவளி தினத்தை முன்னிட்டு தொடர் விடுமுறை காரணமாக செங்கம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து நாமக்கல் நீர்வீழ்ச்சி மற்றும் குப்பநத்தம்அணை, ஜமுனாமரத்தூர் உள்ளிட்ட பகுதிகளுக்கு பொதுமக்கள் குவிந்த வண்ணம் உள்ளனர்.

இந்த நிலையில் நாமக்கல் நீர்வீழ்ச்சியில் 50-க்கும் மேற்பட்டோர் தண்ணீர் வரத்தை கண்டுகளித்து குளித்துக் கொண்டு இருந்தனர். இந்த நிலையில் திடீரென காட்டாற்று வெள்ளம் வரத் தொடங்கியதால், வெள்ளத்தை தாண்டி நீர்வீழ்ச்சியின் மறுகரைக்கு வரமுடியாமல் அங்கிருந்தவர்கள் சிக்கி தவித்தனர்.

இதுகுறித்து செங்கம் தீயணைப்பு துறை வீரர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்பு துறையை வீரர்கள் சுமார் 50 பேரை கயிறு கட்டி பத்திரமாக மீட்டனர். இந்த மீட்பு பணியின் போது வருவாய்த்துறையினர் மற்றும் காவல்துறையினர் உடனிருந்தனர்.

Tags

Next Story
100% இத மட்டும் ஃபாலோ பண்ணுங்க.. ஒரே மாசத்துல 10,12 கிலோ எடை குறையலாம்..! ரொம்ப ஈஸியா..! | Easy weight loss diet plan in Tamil