செங்கத்தில் உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்ட முகாம்
மாணவ மாணவியர்களுக்கு பள்ளி புத்தகங்களை வழங்கிய ஆட்சியர் மற்றும் எம் எல் ஏ
உங்களைத் தேடி, உங்கள் ஊரில்" திட்ட முகாமில் 7 பேருக்கு பட்டா மாறுதல் ஆணைகளை திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் வழங்கினார்.
செங்கம் தனியார் திருமண மண்டபத்தில் நேற்று முன்திம் "உங்களை தேடி, உங்கள் ஊரில் திட்ட முகாம் நடைபெற்றது. திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் முகாமில் கலந்துகொண்டு பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினர். செங்கம் சட்டமன்ற உறுப்பினர் கிரி, மாவட்ட வருவாய் அலுவலர் பிரியதர்ஷினி, ஒன்றியக் குழு தலைவர் விஜயராணி குமார் ஆகியோர் கலந்துகொண்டனர்.
முகாமில் மாவட்ட ஆட்சியர் பாஸ்கரபாண்டியன் பேசுகையில் கூறியதாவது:-
திருவண்ணாமலை மாவட்டத்தில் நான்காவது வட்டத்தில் உங்களை தேடி உங்கள் ஊரில் சிறப்பு திட்டத்தின் கீழ் அனைத்து அரசு துறைகளின் சார்பாக ஆய்வு மேற்கொள்ளப்படுகிறது. அரசு அலுவலர்கள் ஆய்வு மேற்கொண்ட விவரத்தை அறிக்கையாக பெற்று ஏதேனும் குறைகள் இருந்தால் அவற்றின் மீது கவனம் செலுத்தி தீர்வு காண நடவடிக்கை மேற்கொள்ளப்படும். தமிழக அரசு வசிக்க வீடற்ற ஏழ்மை நிலையில் உள்ள மக்களுக்கு கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் வீடு வழங்க நடவடிக்கை எடுத்து வருகிறது.
அதன்படி திருவண்ணாமலை மாவட்டத்தில் கணக்கெடுக்கும் பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது என மாவட்ட ஆட்சியர் பாஸ்கரபாண்டியன் கூறினார்.
செங்கம் கணேசர் திருமண மண்டபத்தில் "உங்களை தேடி, உங்கள் ஊரில் "திட்டத்தின் கீழ் நடைபெற்ற நிகழ்ச்சியில் வருவாய்த்துறை சார்பாக 5 பயனாளிகளுக்கு உட்பிரிவு பட்டா மாறுதலுக்கான ஆணைகளையும் , 7 பயனாளிகளுக்கு முதியோர் உதவித்தொகைக்கான ஆணைகளையும், வேளாண்மைத்துறை சார்பாக 1 பயனாளிக்கு வேளாண் இடுப்பொருளும், 1 பயனாளிக்கு தார்ப்பாயும், மகளிர் சுய உதவிக்குழுவின் சார்பாக 2 மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு தலா ரூபாய் 50,000 மதிப்பில் தொழிற்கடனுதவிக்கான ஆணைகளையும், குழந்தைகள் நலன் மற்றும் சிறப்புச் சேவைகள் துறையின் கீழ் செயல்படும் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு சார்பாக பெற்றோர்களை இழந்த இரண்டு குழந்தைகளுக்கு நிதி ஆதரவு திட்டத்தின் கீழ் ரூபாய் 4000 நிதியுதவி என நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சிய ர் வழங்கினார்.
மேலும், செங்கம் பகுதியை சேர்ந்த பள்ளி கல்வியை இடைநின்ற மாணவ, மாணவிகளை கண்டறிந்து அவர்களை மாவட்ட ஆட்சியர் நேரில் அழைத்து பள்ளிக்கு செல்ல அறிவுறுத்தி பள்ளி புத்தகங்களை வழங்கி பள்ளிக்கு அனுப்பி வைத்தார்.
இதன் தொடர்ச்சியாக, பிற்படுத்தப்பட்டோர் நல விடுதி மற்றும் ஆதி திராவிடர் நல விடுதிகளில் மாவட்ட ஆட்சி ய ர் ஆய்வு மேற்கொண்டு மாணவர்களின் கல்வி முறை குறித்து கேட்டறிந்து மாணவர்களுடன் உரையாடி, உணவினை உண்டு தரம் குறித்து பரிசோதித்தார்.
முகாமில், வருவாய் கோட்டாட்சியர் மந்தாகினி, திட்ட இயக்குநர் மகளிர் திட்டம் சரண்யா தேவி, உள்ளாட்சி பிரதிநிதிகள், அரசு அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu