திருவண்ணமலையில் ஐந்தாவது சிறப்பு தடுப்பூசி முகாம்

செங்கத்தில் நடைபெற்ற சிறப்பு தடுப்பூசி முகாம்
திருவண்ணாமலை மாவட்டம் முழுவதும் இன்று ஐந்தாவதுவது சிறப்பு தடுப்பூசி முகாம் நடைபெற்று வருகிறது. செங்கம் ஒன்றியம் முழுவதும் மதியம் ஒரு மணி வரை சுமார் 2 ஆயிரம் நபர்கள் தடுப்பு ஊசி செலுத்தி கொண்டனர்.
மாவட்ட ஊராட்சி துணை இயக்குனர் லட்சுமி நரசிம்மன் தலைமையில் மருத்துவர்கள், வட்டார வளர்ச்சி அதிகாரிகள், செவிலியர்கள், அனைத்து பகுதி விஏஓ கள், மற்றும் அதிகாரிகளின் மேற்பார்வையில் தடுப்பூசி முகாம் நடைபெற்றது.
மாவட்டம் முழுவதும் தொடர் மழையின் காரணமாக தடுப்பூசி முகாம் சற்று மந்த நிலையில் உள்ளது.
கீழ்பென்னாத்தூர் தொகுதிக்குட்பட்ட கனபாபுரம், வழுதலங்குணம், மேக்களூர், கீழ்பென்னாத்தூர் பேரூராட்சி மற்றும் வேட்டவலம் பேரூராட்சிகளில் நடைபெற்று கொண்டிருக்கும் தடுப்பூசி முகாமினை பார்வையிட்டு, அங்கு தடுப்பூசி செலுத்தி கொண்டவர்களுக்கு பரிசு பொருட்களை தமிழக சட்டப்பேரவை துணைத்தலைவர் துணைத்தலைவர் கு.பிச்சாண்டி வழங்கினார்.
மேலும் அங்கு நடைபெற்றுவரும் தடுப்பூசி முகாமை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
Tags
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu