காதல் திருமணம் செய்த மருமகனை கூலிப்படை வைத்து சரமாரியாக தாக்கிய மாமனார்

காதல் திருமணம் செய்த மருமகனை  கூலிப்படை வைத்து சரமாரியாக தாக்கிய மாமனார்

கைது செய்யப்பட்ட பூசாரி மற்றும் குற்றவாளிகள்

செங்கத்தில் காதல் திருமணம் செய்த மருமகனை கூலிப்படை வைத்து சரமாரியாக வெட்டிய மாமனார் கைது செய்யப்பட்டார்.

செங்கத்தில் கூலிப்படை ஏவி மாமனாரே மருமகனை கொலை முயற்சி சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இது தொடர்பாக கோயில் பூசாரி மற்றும் அவரது மகன் ஆகிய 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் பகுதியைச் சேர்ந்தவர் விஜி. இவர் செங்கம் பெங்களூர் ரோட்டில் இயங்கி வரும் வெங்கடேஷ்வரா பெட்ரோல் பங்கில் ஊழியராக பணியாற்றி வந்தார். இவருக்கும் சென்னசமுத்திரம் பகுதியை சேர்ந்த காளி கோயில் பூசாரி மகளான ஜெயஸ்ரீ என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டு அது காதலில் முடிவடைந்துள்ளது. இவர்களின் காதலுக்கு எதிர்ப்பு கிளம்பியதால், பதிவு திருமணமாக செய்து தனி குடித்தனம் நடத்தி வருகின்றனர்.

பெண்ணின் தந்தை ஜானகிராமன் செங்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்து தனது மகளை தன்னுடன் அனுப்பி வைக்குமாறு கேட்டுள்ளார். அப்போது, ஜெயஸ்ரீ தனது கணவருடன் செல்வதாக காவல் நிலையத்தில் கூறி விட்டு இருவரும் தனியாக குடும்பம் நடத்தி வந்துள்ளனர்.இந்நிலையில் ஜெயஸ்ரீ தற்போது மூன்று மாத கர்ப்பிணியாக இருந்து வருகிறார்.

தனது மகள் காதல் திருமணம் செய்தது பூசாரி ஜானகிராமனுக்கு பிடிக்கவில்லையாம்.

இதனால் மருமகன் விஜியை கூலிப்படை மூலம் கொலை செய்ய சில நாட்களாக பூசாரி நோட்டமிட்டு வந்துள்ளார் . இந்நிலையில் நேற்று முன்தினம் நள்ளிரவு இரவு விஜி பெட்ரோல் பங்கில் வேலை பார்த்துக் கொண்டிருந்தபோது முகமூடி அணிந்த மர்ம நபர்கள் விஜியை சரமாரியாக வெட்டி உள்ளனர். மேலும் தடுக்கச் சென்ற மற்றொரு பெட்ரோல் பங்க் ஊழியர் ஆன அரவிந்த்சாமி என்பவரையும் அந்த கூலிப்படை கும்பல் வெட்டிவிட்டு தப்பி சென்றுள்ளனர்.

ரத்த வெள்ளத்தில் சாய்ந்த விஜய், உடனே அங்கு இருந்தவர்கள் ஊழியர்கள் மீட்டு செங்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அவருக்கு மேல் சிகிச்சை தேவைப்பட்டதால் உயிருக்கு ஆபத்தான நிலையில் திருவண்ணாமலை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.

இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த செங்கம் போலீசார் பெட்ரோல் பங்கில் உள்ள சிசிடிவி காட்சிகளை வைத்து விசாரணை நடத்தினர்.

போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் நேற்று குற்றவாளிகள் அடையாளம் காணப்பட்டனர். குற்றம் நடந்த 12 மணி நேரத்தில் செங்கம் போலீசார் மாமனார் பூசாரி ஜானகிராமன் குற்றவாளிகளை கைது செய்து சிறையில் அடைத்தனர். மாமனாரே மருமகனை கொலை செய்ய திட்டமிட்ட இச்சம்பவம் செங்கம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Read MoreRead Less
Next Story