சாத்தனூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பால் விவசாயிகள் மகிழ்ச்சி

சாத்தனூர் அணைக்கு  நீர்வரத்து அதிகரிப்பால் விவசாயிகள் மகிழ்ச்சி
X

சாத்தனூர் அணை

Sathanur Dam Today News - சாத்தனூர் அணைக்கு வினாடிக்கு 3 ஆயிரம கன அடி தண்ணீர் வருவதால் 3 மாவட்ட விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Sathanur Dam Today News -திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டு அருகே உள்ள சாத்தனூர் அணையில் தேக்கப்படும் தண்ணீரின் மொத்த கொள்ளளவு 7 ஆயிரத்து 321 மில்லியன் கனஅடி ஆகும்.

சாத்தனூர் அணையிலிருந்து வெளியேறும் தண்ணீர் மூலமாக திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் உள்ள 50 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.

இந்த நிலையில் தென்பெண்ணை ஆற்றின் நீர்பிடிப்பு பகுதிகளில் கடந்த சில நாட்களாக பரவலாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது.இதனால் கிருஷ்ணகிரி அணைக்கு தண்ணீர் அதிகளவில் வந்து கொண்டிருந்தது. கிருஷ்ணகிரி அணையின் மொத்த உயரமான 52 அடியில் தற்போது 51 அடி அளவுக்கு தண்ணீர் நிரம்பியுள்ளது.

இதைத்தொடர்ந்து அணையின் பாதுகாப்பு கருதி தென்பெண்ணையாற்றில் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.கிருஷ்ணகிரி அணையிலிருந்து திறந்து விடப்பட்ட தண்ணீர், சாத்தனூர் அணைக்கு வினாடிக்கு நேற்று மாலை நிலவரப்படி 3 ஆயிரம் கனஅடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.

இதனால், சாத்தனூர் அணையின் நீர்மட்டம் நேற்று மாலை நிலவரப்படி 105 அடியாக உயர்ந்துள்ளது. கிருஷ்ணகிரிஅணையில் இருந்து தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளதால் ஓரிரு வாரத்தில் சாத்தனூர் அணை முழு கொள்ளளவான 119 அடியை எட்டி விடும். எனவே சாத்தனூர் அணையை நம்பியுள்ள 3 மாவட்ட விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!