தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் கடன் வழங்கியதில் முறைகேடுகள்

தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் கடன் வழங்கியதில் முறைகேடுகள்
X

ராதாபுரம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம்

ராதாபுரம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் கடன் வழங்கியதில் முறைகேடுகள் நடைபெற்றுள்ளதாக விவசாயிகள் புகார் அளித்துள்ளனர்

திருவண்ணாமலை சூர்யா நகர் பகுதியைச் சேர்ந்த விவசாய சங்க பிரதிநிதி சரவணன் தலைமையிலான விவசாயிகள் நார்த்தாம்பூண்டி சிவா, ஜெயகாந்தன் உள்ளிட்டோர் திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகத்தில் அளித்த மனுவில்,

தண்டராம்பட்டு தாலுகாவில் செயல்பட்டுவரும் ராதாபுரம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் ஒரே நபருக்கு அங்கத்தினர் எண் மாற்றம் செய்தும், ஒன்றுக்கும் மேற்பட்ட கடன் பெற தகுதியினை மீறி கடன் வழங்கி முறைகேடுகள் மற்றும் கையாடல்கள் நடைபெற்றுள்ளது.

மேலும் இந்த கூட்டுறவு சங்கத்தில் ஏற்கனவே பயிர் கடன் தள்ளுபடி செய்ததில் ரூ.1 கோடி அளவிற்கு ஊழல் நடந்துள்ளது.

எனவே இதுகுறித்து அதிகாரிகளை கொண்டு தீவிர விசாரணை மேற்கொண்டு இச்சங்கத்தில் முறைகேடுகள் ஏற்படுவதை தவிர்க்க வழிவகை செய்ய வேண்டும் என தெரிவிக்கப்பட்டிருந்தது

இதுகுறித்து கூட்டுறவு சங்கங்களின் திருவண்ணாமலை மண்டல இணைப்பதிவாளர் ராஜ்குமாரிடம் கேட்டபோது, இச்சங்கத்தில் முறைகேடுகள் எதுவும் நடைபெற்று உள்ளதா என்பது குறித்து விசாரணை குழு ஒன்று அமைக்கப்பட்டு முறையாக விசாரணை நடத்தப்படும் என்றார்.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!