திருவண்ணாமலை; அதிகாரிகள் வராததை கண்டித்து விவசாயிகள் சாலை மறியல்

சாலை மறியலில் ஈடுபட்ட விவசாயிகள்
திருவண்ணாமலை மாவட்டம் முழுவதும் விவசாயிகள் குறை தீர்வு கூட்டம் நடைபெற்றது.
செங்கத்தில் நடைபெற்ற விவசாயிகள் குறைதீா் கூட்டத்தில் பங்கேற்ற விவசாயிகள், அரசுத் துறை முதல்நிலை அதிகாரிகள் கூட்டத்தில் பங்கேற்பதில்லை என புகாா் தெரிவித்து வெளிநடப்பு செய்து சாலை மறியலில் ஈடுபட்டனா்.
திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் வட்ட அளவிலான விவசாயிகள் குறைதீா் கூட்டம் வேளாண்மைத் துறை அலுவலக வளாகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
மாவட்ட உதவித் திட்ட அலுவலா் தமிழ்ச்செல்வன் தலைமை வகித்தாா்.
கூட்டத்தில் கலந்துகொண்ட விவசாயிகள் மாதாமாதம் நடைபெறும் இந்தக் கூட்டம் கடைமைக்கு நடத்தப்படுகிறது.
அரசுத் துறை முதல்நிலை அதிகாரிகள் யாரும் கலந்துகொள்வது இல்லை. விவசாயிகள் எழுப்பும் சந்தேகங்களுக்கு எந்த அதிகாரியும் பதிலளிப்பது கிடையாது. மேலும், விவசாயம் சாா்ந்த மற்றும் பொதுமக்கள் பயன்பாடு குறித்து மனுக்கள் அளித்தால், அவற்றின் மீது நடவடிக்கை எடுப்பதில்லை.
விவசாயிகளுக்கு அரசு அறிவிக்கும் மானியம், மற்றும் வேளாண்மைத் துறை சாா்ந்த தகவல்கள், நலத் திட்ட உதவிகள் குறித்து எந்தவித தகவலையும் கூட்டத்தில் அதிகாரிகள் தெரிவிப்பதில்லை என விவசாயிகள் கூட்டத்தை புறக்கணித்து, கூட்ட அரங்கில் இருந்து கூச்சலிட்டவாறு வெளியேறி, துக்காப்பேட்டை அரசு மருத்துவமனை முன் சாலை மறியலில் ஈடுபட்டனா்.
விவசாயிகள் குறை தீர்வு கூட்டத்திற்கு துறை சார்ந்த அரசு அதிகாரிகள் முறையாக வராததால் துறை சார்ந்த கேள்விகளை விவசாயிகள் கேட்டு பதில் பெற முடியவில்லை என குற்றம் சாட்டியும்,
செங்கம் சிவன் கோவில் அருகே இருந்த அண்ணா சீரணி அரங்கம் இடிக்கப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்காமல் அதிகாரிகள் மெத்தனம் காட்டி வருவதாக விவசாயிகள் குற்றம் சாட்டி அதிகாரிகளை எதிர்த்து முழக்கங்களை எழுப்பினர்.
தகவலறிந்து செங்கம் போலீஸாா் மற்றும் மாவட்ட உதவித் திட்ட அலுவலா் தமிழ்ச்செல்வன் சென்று, முறையாக அதிகாரிகளை வரவழைத்து கூட்டம் நடத்தப்படும் என விவசாயிகளை சமாதானப்படுத்தினா்.
அதற்கு மீண்டும் கூட்டம் நடத்தப்படும் தேதியை அறிவிக்கவேண்டும் என விவசாயிகள் கோரினா்.
பிப்ரவரி 13-ஆம் தேதி கூட்டம் நடத்தப்படும் எனஅறிவித்த பின்னா் சாலை மறியல் போராட்டம் கைவிடப்பட்டது. இதனால், அந்தப் பகுதியில் சுமாா் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu