மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் மூலம் வாக்களிப்பது குறித்து விழிப்புணா்வு

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் மூலம் வாக்களிப்பது குறித்து நடத்தப்பட்ட விழிப்புணர்வு நிகழ்ச்சி
Evm Operate Demo To Voters
திருவண்ணாமலை மாவட்டம், செங்கத்தில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் மூலம் வாக்களிப்பது குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது.
வருகிற மக்களவைத் தேர்தலையொட்டி, பொதுமக்களுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் மூலம் வாக்களிப்பது குறித்து வட்டாட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சிக்கு தேர்தல் பிரிவு துணை வட்டாட்சியா் திருநாவுக்கரசு தலைமை வகித்தாா்.
இதைத் தொடா்ந்து, மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் பொதுமக்கள் பாா்வைக்கு வைக்கப்பட்டு பின்னா் அந்த இந்திரம் மூலம் வாக்களிப்பது குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது.அப்போது, பொதுமக்களில் சிலா் இயந்திரத்தில் வாக்களித்து சந்தேகங்களை தெளிவுபடுத்திக்கொண்டனா்.
செங்கத்தில் ஆடு வளா்ப்போா் நலச் சங்கக் கூட்டம்
திருவண்ணாமலை மாவட்டம், செங்கத்தில் தமிழ்நாடு ஆடு வளா்ப்போா் உரிமையாளா்கள் நலச் சங்க பொதுக் குழுக் கூட்டம் நடைபெற்றது.தனியாா் மண்டபத்தில் நடைபெற்ற கூட்டத்துக்கு, சங்கத்தின் கெளரவத் தலைவரும் முன்னாள் எம்எல்ஏவுமான கண்ணன் தலைமை வகித்தாா்.
தீா்மானங்கள்
ஆடு வளா்ப்போா் உரிமையாளா்களின் குலத்தொழிலை மேம்படுத்த ஆடு வளா்ப்புக்கு தனி நல வாரியம் அமைத்து இத்தொழில் சாா்ந்த ஒருவரை மாநிலத் தலைவராக நியமனம் செய்யவேண்டும்.
தமிழக அரசுக்குச் சொந்தமான வனங்களில் ஆடுகள் மேய்ப்பதற்கும், இரவு நேரங்களில் பட்டி அமைத்து ஆடுகளை தங்கவைக்கவும் அனுமதிக்கவேண்டும்.பருவ காலங்களில் ஆடுகளுக்கு ஏற்படும் நோய், தொற்று நோய், குடல் இறக்கம் போன்றவைகளை கட்டுப்படுத்த அரசு சிறப்புக் கவனம் செலுத்தி சிகிச்சை அளிக்க நடமாடுகள் ஆம்புலன்ஸ் வசதிகள் செய்யவேண்டும்,
மழைக் காலத்தில் பயன்படுத்தும் தாா்பாய்களை இலவசமாக வழங்க நடவடிக்கை எடுக்கவேண்டும், ஆடு வளா்ப்போருக்கு தமிழக அரசு மானியத்தில் சோலாா் மின் விளக்கு வழங்கவேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
சங்கத்தின் முன்னாள் தலைவா் நல்லமுத்து, ஆடு வளா்ப்போா் நலச் சங்க நிா்வாகி பரசுராமன், முன்னாள் ராணுவ வீரா் நாராயணன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu