செங்கத்தில் ஆக்கிரமிப்பு அகற்றும் பணி தொடக்கம்
ஆக்கிரமிப்பு பகுதிகளை அகற்றும் பணியில் ஈடுபட்டுள்ள பேரூராட்சி அலுவலர்கள்
செங்கம் பேரூராட்சிக்கு உள்பட்ட பஜாா் வீதியில் நகைக் கடை, மளிகைக் கடை என பல்வேறு கடைகள் உள்ளன.
கடைகளின் உரிமையாளா்கள் கடையின் முன் ஆக்கிரமிப்பு செய்து, கடைகளை விரிவுபடுத்தியுள்ளனா். இதனால் அந்தச் சாலையில் காா், 108 ஆம்புலன்ஸ், தீயணைப்பு வாகனங்கள் போகாத நிலை இருந்து வருகிறது. மேலும் பண்டிகை நாள், திருமண விஷேச நாள்களில் அப்பகுதியில் இரு சக்கர வாகனங்கள் கூட செல்லமுடியாத நிலை ஏற்படுகிறது. இதனால், அப்பகுதியில் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என சுமாா் 10 ஆண்டுகளாக அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து வந்தனா்.
இந்த நிலையில், தற்போது அப்பகுதியில் சாலையின் இருபுறமும் கழிவுநீா்க் கால்வாய்கள் அமைக்க பேரூராட்சி நிா்வாகம் நடவடிக்கை எடுத்து வருகிறது.
இதையடுத்து, முதல் கட்டமாக ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணியை செங்கம் பேரூராட்சி நிா்வாகம் தொடங்கியுள்ளது.
சாலை அமைக்க மாணவர்கள் கோரிக்கை
திருவண்ணாமலை மாவட்டம் செங்கத்தில் கல்வித்துறை, மாணவியர் விடுதி, கால்நடை மருத்துவம் துறை ஒரே இடத்தில் மூன்று அலுவலகங்கள் இயங்கி வருகிறது.
இந்த அலுவலகங்களுக்கு செல்லும் சாலை குண்டும் குழியுமாக உள்ளதால் மழைக்காலத்தில் மிகவும் மோசமாகி தண்ணீர் தேங்கி நிற்பதோடு சாலையில் செல்வதற்கு சிரமம் ஏற்படுகிறது.
எனவே சாலையின் நடுவே உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி சாலை மற்றும் பக்க கால்வாய் அமைக்கவும், மாணவியர் விடுதி அருகே மின்விளக்கு இல்லாததால் இரவு நேரங்களில் அச்சத்தில் மாணவிகள் உள்ளனர். எனவே மின் விளக்குகள் அமைக்க பல ஆண்டுகளாக மாணவிகள் அதிகாரிகளுக்கு கோரிக்கை வைத்தும் இதுவரை மின்விளக்குகள் பொருத்தப்படவில்லை எனவே அதிகாரிகள் உடனடியாக சாலை அமைக்கவும் மின் விளக்கு அமைக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என விடுதி மாணவிகள், கால்நடை வளர்ப்பவர்கள் கோரிக்கை வைத்தனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu