மின்சார கம்பி உரசியதால் தீப்பற்றிய வைக்கோல்

மின்சார கம்பி உரசியதால் தீப்பற்றிய வைக்கோல்
X

மின் கம்பி உரசி தீப்பிடித்த வைக்கோலை தண்ணீர் பீச்சியடித்து தீயை அணைக்கும் முயற்சியில் தீ  அணைப்பு படையினர்.

வைக்கோலில் மின் கம்பி உரசியதால் வைக்கோல் தீ பிடித்து எரிந்து சாம்பலானது.

வைக்கோலை ஏற்றிச் செல்லும் போது மின் கம்பி உரசியதால் வைக்கோல் தீப்பற்றி எரிந்து சாம்பலானது.

திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் அடுத்த காயம்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் குமார். விவசாயி. இவரது விவசாய நிலத்தில் அறுவடை செய்த வைக்கோலை பக்கிரிபாளையம் கிராமத்தை சேர்ந்த ரமேஷ் என்பவர் கால்நடைகளுக்கு தீவனமாக பயன்படுத்த விலைக்கு வாங்கினார். வைக்கோலை டிராக்டரில் ஏற்றிக்கொண்டு வந்த போது விவசாய நிலத்தில் இருந்த மின்கம்பி வைக்கோல் மீது உரசியது. அதில் தீ பற்றி வைக்கோல் முழுவதும் எரிந்து சாம்பலானது. தீயணைப்பு மற்றும் மீட்புப் பணியாளர்கள் விரைந்து சென்று தீயை அணைத்து டிராக்டரை மீட்டெடுத்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Tags

Next Story
ai marketing future