நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் பணிகள் குறித்து தேர்தல் பார்வையாளர் ஆய்வு

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் பணிகள் குறித்து தேர்தல் பார்வையாளர் ஆய்வு
X

தேர்தல் பணிகள் குறித்து ஆய்வு மேற்கொண்ட தேர்தல் பார்வையாளர் ராஜ்குமார் 

செங்கத்தை அடுத்த புதுப்பாளையம் பேரூராட்சியில் தேர்தல் பணிகள் குறித்து தேர்தல் பார்வையாளர் ஆய்வு மேற்கொண்டார்

திருவண்ணாமலை மாவட்டம் செங்கத்தை அடுத்த புதுப்பாளையம் பேரூராட்சி அலுவலகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் பணிகள் குறித்து மாவட்ட ஆவின் பொது மேலாளரும் தேர்தல் பார்வையாளருமான ராஜ்குமார் ஆய்வு செய்தார்.

அப்போது வேட்பாளர்கள் மனு தாக்கல் செய்யும் இடம், பரிசீலனை செய்யும் இடம், போலீஸ் பாதுகாப்பு, வாக்குச் சாவடிகளில் தேவையான அடிப்படை வசதிகள், என அடிப்படை வசதிகள் குறித்து பார்வையிட்டார்.

இந்த ஆய்வின்போது பேரூராட்சி செயல் அலுவலர்கள், வருவாய்த் துறையினர், காவல் துறையினர், உள்ளிட்ட அரசு அலுவலர்கள் உடனிருந்தனர்

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!