பேருந்து நிலையத்தில் மனைவியை சரமாரியாக தாக்கிய போதை கணவன்

பேருந்து நிலையத்தில் மனைவியை சரமாரியாக தாக்கிய போதை கணவன்
X

போலீசை அடிக்க பாய்ந்த போதை ஆசாமி

பேருந்து நிலையத்தில் மனைவியை சரமாரியாக தாக்கிய போதை கணவன், தட்டி கேட்ட போலீசையும் அடிக்க பாய்ந்தார்

திருவண்ணாமலை மாவட்டம், கலசப்பாக்கம் அடுத்த தென்மாதிமங்கலம் பகுதியைச் சேர்ந்த தம்பதியினர் திருப்பூர் பகுதிக்கு கூலி வேலைக்கு செல்ல, செங்கம் புதிய பேருந்து நிலையத்தில் பேருந்துக்காக காத்திருந்தனர்.

இரண்டு கை குழந்தைகளுடன், தனது மனைவியை பேருந்து நிலையத்தில் விட்டுவிட்டு திடீர் மாயமான கணவர், செங்கம் புதிய பேருந்து நிலையம் பின்புறம் இயங்கிவரும் அரசு மதுபான கடையில் மது வாங்கி குடித்துவிட்டு, பின்னர் பேருந்து நிலையத்தில் இருந்த தனது மனைவியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். கைக்குழந்தையுடன் நின்று இருந்த மனைவியை, போதை கணவர் சரமாரியாக தாக்கிய சம்பவம் பேருந்து நிலைய வளாகத்திற்குள் இருந்தவர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

சம்பவம் குறித்து அறிந்து விரைந்து வந்த காவலர் ஒருவர் போதை ஆசாமியிடம் கைக்குழந்தையுடன் உள்ள பெண்மணியை இப்படியா தாக்குவது என கேட்டபோது போதை ஆசாமி, போலீஸ் என்று தெரிந்தும் அவரை தகாத வார்த்தைகளால் திட்டி தாக்கம் முயற்சித்த சம்பவம் அங்கிருந்த பயணிகளிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதனை தொடர்ந்து அனைத்து மகளிர் காவல் நிலையம் பெண் காவலர்களை அழைத்து பேருந்து நிலைய வளாகத்திற்குள் வந்து போதை கணவரிடம் இருந்து அவரது மனைவியை மீட்டு காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்றனர்,

மேலும் பேருந்து நிலையத்தில் இருந்த பயணிகள் கூறும் போது ,பேருந்து நிலையத்தின் பின்புறம் இயங்கிவரும் மதுபான கடையை வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும், பேருந்து நிலையப் பகுதியில் எப்போதுமே தகராறுகள் நடந்து கொண்டே இருக்கிறது. எனவே இங்கு ஏங்கி வரும் மதுபான கடையை வேறு இடத்திற்கு மாவட்ட நிர்வாகம் மாற்ற வேண்டும் என கோரிக்கை வைத்தனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!