விபத்துக்குள்ளான வேனில் சிக்கியது ரூ.6 லட்சம் மதிப்பில் போதை பொருட்கள்

விபத்துக்குள்ளான வேனில் சிக்கியது ரூ.6 லட்சம் மதிப்பில் போதை பொருட்கள்
X

போலீசார் கைப்பற்றிய போதை பொருட்கள்

விபத்துக்குள்ளான வேனில் ரூ.6 லட்சம் மதிப்பில் போதைப் பொருள் சிக்கியது. ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

திருவண்ணாமலை மாவட்டம் தச்சம்பட்டு அருகே விபத்தில் சிக்கிய மினி லாரியில் ரூ.6 லட்சம் மதிப்பில் போதைப் பொருள் சிக்கியது. இது குறித்து ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

தண்டராம்பட்டு அருகே உள்ள கொழுந்தம்பட்டு தனியார் சர்க்கரை ஆலையிலிருந்து லாரியில் மொலாசஸ் ஏற்றிக்கொண்டு மதுரை நோக்கி சென்று கொண்டிருந்தது.

லாரியை மதுரையை அடுத்த விளாங்குடி பகுதியை சேர்ந்த டிரைவர் ஆனந்தன் என்பவர் ஓட்டினார். தேவனூர்புதூர் பகுதியில் சென்றபோது லாரியை சாலை ஓரமாக டிரைவர் நிறுத்தி விட்டு இறங்கி அருகே உள்ள கடைக்கு சென்றார்.

அப்போது சிறிது நேரத்திலேயே திருவண்ணாமலை பகுதியில் இருந்து அதி வேகமாக வந்த மினி லாரி ஒன்று நின்று கொண்டிருந்த லாரி மீது மோதி விபத்துக்குள்ளானது மினி லாரிக்குள் இரண்டு பேர் சிக்கிக் கொண்டிருந்தது தெரிய வந்தது.

இச்சம்பவம் குறித்து அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் தச்சம்பட்டு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் தீயணைப்பு துறையினருடன் இணைந்து இருவரையும் மீட்டனர். மினி லாரியில் சோதனை செய்தபோது அதில் 76 மூட்டைகளில் தடை செய்யப்பட்ட ஹான்ஸ், போதை பாக்குகள் ஆகியவை இருந்தன. இதனையடுத்து போதை பொருட்கள் இருந்த மூட்டைகளை கைப்பற்றி 2 பேரையும் தச்சம்பட்டு போலீஸ் நிலையத்துக்கு கொண்டு வந்தனர்.

அங்கு அந்த இருவரிடமும் விசாரித்ததில் அவர்கள் ராஜஸ்தான் மாநிலம் ஜாலூர் பகுதியைச் சேர்ந்த ஹிமாதாம் என்பவர் மகன் சங்கரராம், மற்றும் அதே பகுதியைச் சேர்ந்த நாராயணராம் நாகஜி மகன் வஜங்கர ராம் என்பதும் போதை பொருட்களை கடத்தி வந்ததும் தெரிய வந்தது.. 76 மூட்டைகளில் கைப்பற்றப்பட்ட போதை பொருட்களின்மதிப்பு ரூ.6 லட்சம் இருக்கும் என கூறப்படுகிறது.

இது குறித்த கைதான 2 பேரிடம் போதை பொருட்களை எங்கு எங்கு கடத்திச் செல்கிறார்கள், இதில் தொடர்புடையவர்கள் யார் என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags

Next Story
ஆள் இல்லாமலே இயங்கும் விமானம்,அமெரிக்க விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு