செங்கத்தில் தி.மு.க. வேட்பாளரை ஆதரித்து திராவிடர் கழகம் பிரச்சாரம்

செங்கத்தில் தி.மு.க. வேட்பாளரை ஆதரித்து திராவிடர் கழகம் பிரச்சாரம்
X

உதயசூரியன் சின்னத்துக்கு வாக்கு சேகரித்த திராவிடர் கழக மாநில துணை பொது செயலாளர்  மதிவதனி

செங்கத்தில் திமுக வேட்பாளரை ஆதரித்து திராவிடர் கழக துணை பொதுச்செயலாளர் மதிவதனி பிரச்சாரம் செய்தார்.

திருவண்ணாமலை மக்களவைத் தொகுதி திமுக வேட்பாளா் சி.என். அண்ணாதுரையை ஆதரித்து செங்கத்தில் தோக்கவாடி, துக்காப்பேட்டை புதிய பேருந்து நிலையம், போளூா் சாலை சந்திப்பு ஆகிய இடங்களில் தெருமுனைப் பிரசாரம் நடைபெற்றது.

செங்கம் தொகுதி எம்.எல்.ஏ. கிரி தலைமையில் நடைபெற்ற இந்தத் தெருமுனை பிரசாரத்தில் திராவிடா் கழக துணை பொதுச் செயலா் மதிவதனி கலந்து கொண்டு வேட்பாளா் அண்ணாதுரையை ஆதரித்து உதயசூரியன் சின்னத்துக்கு வாக்கு சேகரித்துப் பேசினாா்.

திமுக நகரச் செயலாளர் அன்பழகன், பேரூராட்சிமன்றத் தலைவா் சாதிக்பாஷா, ஒன்றியச் செயலா்கள் ஏழுமலை, செந்தில்குமாா், மனோகரன் உள்ளிட்ட கூட்டணிக் கட்சி நிா்வாகிகள் பலா் கலந்து கொண்டனா்.

தொடர்ந்து தண்டராம்பட்டு ஊராட்சியில் உள்ள தண்டராம்பட்டு நகரம், ஆண்டிப்பட்டி மற்றும் புளியம்பட்டி, சாத்தனூர் ஊராட்சியில் சாத்தனூர், தென்முடியனூர் உள்ளிட்ட கிராமங்களில் செங்கம் தொகுதி எம்எல்ஏ கிரி தலைமையில் திராவிடர் கழக மாநில துணை பொது செயலாளர் வழக்கறிஞர் மதிவதனி திமுக அரசின் சாதனைகளை எடுத்துரைத்து பொதுமக்களிடம் தீவிர வாக்கு சேகரித்தார்.

இந்நிகழ்வில் விசிக மாவட்ட செயலாளர் நியூட்டன், தண்டராம்பட்டு ஒன்றிய தேர்தல் பணி குழு பொறுப்பாளர் வேலு, ஒன்றிய கழக நிர்வாகிகள் ஜோதி, கல்பனா உள்ளிட்ட கழக நிர்வாகிகள், கூட்டணி கட்சி தோழர்கள் என பலர் கலந்து கொண்டனர்.

சேத்துப்பட்டு

ஆரணி மக்களவைத் தொகுதி திமுக வேட்பாளர் தரணி வேந்தன் சேத்துப்பட்டு பகுதியில் தீவிரவாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

அப்போது அவா் பேசுகையில், மலை மீது உள்ள கனககிரீஸ்வா் கோயிலுக்கு சாலை வசதி, பேருந்து நிறுத்த நிழல்குடை அமைத்தல் என பல்வேறு கோரிக்கைகளை வெற்றி பெற்ற உடன் நிறைவேற்றித் தருவதாகக் கூறினாா்.

மேலும் தென்மாட வீதியில் திறந்தபில் சென்று வாக்கு சேகரித்தாா்.

முன்னாள் மாவட்ட திமுக செயலாளர் சிவானந்தம், ஊராட்சிமன்றத் தலைவா் வெங்கிடேசன், விளையாட்டு மேம்பாட்டு அணி மாவட்ட அமைப்பாளா் மணிகண்டன், மாவட்ட பொருளாளா் தட்சிணாமூா்த்தி, தொகுதி பொறுப்பாளா் அன்பழகன், ஒன்றியச் செயலா் துரைமாமது, கிளைச் செயலா் செல்வம், கூட்டணி கட்சி தோழர்கள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

Tags

Next Story
ஈரோடு வீட்டுவசதி வாரிய அலுவலகம் இடமாற்றம் - பொதுமக்கள் வசதிக்காக புதிய இடத்தில் செயல்பாடு