தமிழகத்தில் உள்ள 40 தொகுதிகளிலும் திமுக அபார வெற்றி: அமைச்சர் பேச்சு

தமிழகத்தில் உள்ள 40 தொகுதிகளிலும் திமுக அபார வெற்றி: அமைச்சர் பேச்சு
X

திமுக வேட்பாளர்களை ஆதரித்து பேசிய அமைச்சர் வேலு

தமிழகத்தில் உள்ள 40 தொகுதிகளிலும் திமுக அபார வெற்றி பெறும் என அமைச்சர் வேலு கூறினார்.

திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம் தொகுதியில் திருவண்ணாமலை மக்களவைத் தொகுதி திமுக வேட்பாளர் அண்ணாதுரை ஆதரித்து உதயசூரியன் சின்னத்தில் வாக்குகள் சேகரித்து அமைச்சர் எ.வ.வேலு பேசினார்.

திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம் தொகுதியில் உள்ள புதுப்பாளையம் ஒன்றியம் முதல் கலசப்பாக்கம் ஒன்றியம் வரை உள்ள புதுப்பாளையம், காஞ்சி சாலை, ஆதமங்கல புதூர், லாடாவரம், பாடகம் உள்ளிட்ட ஊராட்சிகளில் நாடாளுமன்ற உறுப்பினர் திமுக வேட்பாளர் அண்ணாதுரை ஆதரித்து பொதுப்பணித்துறை அமைச்சர் வேலு உதயசூரியன் சின்னத்தில் வாக்கு சேகரித்து பேசியதாவது;

கலசப்பாக்கம் பகுதியில் உள்ள செய்யாற்றின் குறுக்கே மூன்று உயர்மட்ட பாலங்கள் ரூபாய் 60 கோடியில் பாலம் அமைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது, விரைவில் இப்பணிகள் முடிந்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு துவக்கி வைக்கப்படும்.

அதேபோல கலசப்பாக்கம் பகுதியில் உள்ள மிருகண்டா அணை ஆற்றில் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு பெரிய அளவில் பலத்த மழை ஏற்பட்டு காற்றுடன் வெள்ளம் வந்தது .அதில் நான்கு தரைமட்ட பாலங்கள் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டது. அந்த நான்கு தரைமட்ட பாலத்தையும் தரம் உயர்த்தி உயர் மட்ட பாலமாக அமைத்துக் கொடுக்கப்பட்டு வருகிறது. விரைவில் அந்தப் பாலங்கள் மக்கள் பயன்பாட்டுக்கு துவக்கி வைக்கப்படும். இதெல்லாம் திமுக ஆட்சியில் தான் நடைபெற்று வருகிறது.

மேலும் கலசப்பாக்கம் தொகுதியில் ரூபாய் 100 கோடியில் பத்துக்கும் மேற்பட்ட உயர்மட்ட பாலங்கள் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

இந்த கலசப்பாக்கம் தொகுதியில் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோவில்களுக்கு குடமுழுக்கு மற்றும் புனரமைத்தல் போன்ற திருப்பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. சில பணிகள் முடிவுற்று கும்பாபிஷேகங்கள் நடைபெற்றுள்ளன.

திருவண்ணாமலை மற்றும் ஆரணி நாடாளுமன்றத் தொகுதியில் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடும் கழக வேட்பாளர்கள் அதிகமான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவர் .அதேபோல் தமிழகத்தில் உள்ள 40 தொகுதிகளிலும் திமுக கட்டாயம் அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறும்.

பிஜேபி மற்றும் அதிமுக ஆகிய இரண்டு கட்சிகளும் தோற்கடிக்கப்படும், ஏனென்றால் திராவிட மாடல் ஆட்சியில் மக்களுக்கு அவர்கள் இல்லம் தேடி பல திட்டங்கள் செல்கிறது .அதேபோல் திமுக ஆட்சிக்கு வரும்போது எல்லாம் மக்கள் வைக்கும் கோரிக்கைகள் அனைத்தும் உடனுக்குடன் நிறைவேற்றி கொடுக்கப்படுகிறது. திமுக ஆட்சி மக்களின் ஆட்சி, இதை நாம் அனைவரும் எண்ணிப் பார்க்க வேண்டும் .அதனால் தமிழகத்தில் உள்ள 40 தொகுதிகளையும் திமுக கூட்டணியான இந்தியா கூட்டணி அபார வெற்றி பெரும்.

உங்கள் பொன்னான வாக்குகளை உதயசூரியன் சின்னத்தில் வாக்களியுங்கள் என அமைச்சர் வேலு பேசினார்.

இந்தப் பிரச்சாரத்தின் போது கலசப்பாக்கம் சட்டமன்ற உறுப்பினர் சரவணன், ஒன்றிய செயலாளர் சுந்தரபாண்டியன், ஒன்றிய குழு தலைவர் அன்பரசி ராஜசேகரன், பொதுக்குழு உறுப்பினர் இளங்கோவன், மாவட்ட பிரதிநிதிகள், பஞ்சாயத்து தலைவர்கள், ஒன்றிய கவுன்சிலர்கள், கூட்டணி கட்சி நிர்வாகிகள் , கழக நிர்வாகிகள் , உள்ளாட்சி பிரதிநிதிகள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!