செங்கம், போளூர் தொகுதிகளில் நூதன முறையில் வாக்கு சேகரித்த திமுகவினர்

செங்கம், போளூர் தொகுதிகளில் நூதன முறையில் வாக்கு சேகரித்த திமுகவினர்
X

குடுகுடுப்பைக்காரர் வேடம் அணிந்து நூதன முறையில் பிரச்சாரத்தில் ஈடுபட்ட திமுகவினர்.

செங்கம், போளூர் தொகுதிகளில் குடுகுடுப்பைக்காரர் வேடமடைந்து திமுகவினர் பிரச்சாரம் செய்தனர்.

செங்கம், போளூர் தொகுதிகளில் குடுகுடுப்பைக்காரர் வேடமடைந்து திமுகவினர் பிரச்சாரம் செய்தனர்.

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் தொகுதி செங்கம் ஊராட்சிக்கு உட்பட்ட கடைகளில் மற்றும் பொதுமக்கள் கூடும் இடங்களில் திமுக அரசின் இரண்டு ஆண்டு சாதனைகள் மற்றும் நிதிநிலை அறிக்கை சிறப்பு அம்சங்கள் குறித்து தலைமைக் கழக பேச்சாளர் சேலம் கோவிந்தன் அவர்கள் குடுகுடுப்பைக்காரர் வேடமணந்து பிரச்சாரம் செய்தார்.

இந்நிகழ்ச்சிக்கு செங்கம் சட்டமன்ற உறுப்பினரும் மாவட்ட கழக துணை செயலாளருமான கிரி கலந்து கொண்டு பிரச்சார நிகழ்ச்சியை துவக்கி வைத்தார்.

இந்நிகழ்ச்சியில் நகர செயலாளர் அன்பழகன் பேரூராட்சி தலைவர் சாதிக் பாஷா, முன்னாள் பேரூராட்சி தலைவர் முருகன் ,உள்ளிட்ட கழக நிர்வாகிகள் ,பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

போளூர்

திருவண்ணாமலை மாவட்டம் போளூர் டவுன் பகுதிக்கு உட்பட்ட டைவர்ஷன் ரோடு, பேருந்து நிலையம், பஜார் வீதி, வசந்தம் நகர் உள்ளிட்ட முக்கிய தெருக்களில் நகர செயலாளர் தனசேகரன் தலைமையில் திமுகவினர் இரண்டரை ஆண்டுகால சாதனை விளக்க பிரச்சாரம் மேற்கொண்டனர்.

அப்போது தலைமை கழக பேச்சாளர் கோவிந்தன் குடுகுடுப்பைக்காரர் வேடம் அணிந்து வீடு தோறும் திமுகவிற்கு வாக்கு சேகரித்து பிரச்சாரம் செய்தார்.

அப்போது அவர் குடுகுடுப்பைக்காரர் பேசுவது போன்று கையில் உடுக்கையுடன் நல்ல காலம் பிறக்குது நல்ல காலம் பிறக்குது ஜக்கம்மா சொல்றா ஜக்கம்மா சொல்றா உலகத்திலேயே இலவச பஸ் பாஸ் கொடுத்தது நம்ம முதலமைச்சர் ஸ்டாலின் மட்டும்தான் ஜக்கம்மா சொல்றா மோடி இன்னொருமுறை பிரதமரா வந்தா நாட்டை யாராலும் காப்பாற்ற முடியாதுன்னு ஜக்கம்மா சொல்றா, மோடி பிரதமராக வந்து 15 லட்சம் ரூபாய் கொடுக்கிறேன் என்று சொல்லிட்டு இன்னும் 15 ரூபாய் கூட கொடுக்கலைன்னு ஜக்கம்மா சொல்றா, வாயால வடை சுட்ற ஒரே பிரதமர் யார் என்றால் மோடி தான் இதனை ஜக்கம்மா சொல்றா ஜக்கம்மா சொல்றா என தொடர்ந்து திமுகவிற்கு ஆதரவாக குடுகுடுப்பைக்காரர் வேடத்தில் பிரச்சாரம் செய்தது அப்பகுதி மக்கள் வெகுவாக கவர்ந்தது,

இந்நிகழ்ச்சியில் மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் நரேஷ் குமார், நகர மன்ற உறுப்பினர்கள் ஒன்றிய செயலாளர் வார்டு செயலாளர் மற்றும் திமுக நிர்வாகிகள் உள்ளாட்சி பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!