மாற்றுத்திறனாளிகளை பள்ளியில் சேர்க்க மாவட்டம் முழுவதும்விழிப்புணர்வு நிகழ்ச்சி
செங்கத்தில் விழிப்புணர்வு பேரணியை துவக்கி வைத்த காவல் உதவி ஆய்வாளர் முருகன் மற்றும் ஆசிரியர்கள்
திருவண்ணாமலை மாவட்டத்தில் பல்வேறு பள்ளிகளின் சார்பில் விழிப்புணர்வு முகாம் மற்றும் பேரணி நடத்தப்பட்டது. இதில், கண்ணமங்கலம் படவேடு அரசு மேல்நிலைப் பள்ளியில் மாற்றுத்திறன் மாணவர்களுக்கான விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.
படவேடு: அரசு மேல்நிலை பள்ளி கருத்தாய்வு மையத்தில் நடைபெற்ற முகாமில் பள்ளி தலைமை ஆசிரியர் ஆனந்தன் தலைமை வகித்தார். பெற்றோர் கழக தலைவர் பழனி முன்னிலை வகித்தார். மாற்றுத்திறன் மாணவர்களையும் அரசு பள்ளியில் சேர்க்க விழிப்புணர்வு ஊர்வலத்தை தலைமை ஆசிரியர் தொடங்கி வைத்தார்.மாற்றுத்திறனாளிகளுக்கான விழிப்புணர்வு ஊர்வலம் பள்ளியில் தொடங்கி முக்கிய வீதிகள் வழியாக சென்று மீண்டும் பள்ளியை அடைந்தது.
நிகழ்ச்சியில் போளூர் வட்டார வளமையா ஆசிரியர் பயிற்றுநர்கள் சுரேஷ், செல்வதுரை, சஞ்சிதா, சிறப்பு கல்வியாளர்கள் விஜயலட்சுமி , ஸ்டெல்லா மற்றும் மாணவர்கள் ஊர்வலத்தில் கலந்து கொண்டனர்.
செங்கம் : செங்கம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் மாற்றுத்திறனாளி மாணவர்களை பள்ளியில் சேர்ப்பது குறித்து விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. பள்ளி வளாகத்தில் தொடங்கிய பேரணியை செங்கம் காவல் உதவி ஆய்வாளர் முருகன் கொடியசைத்து தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் பள்ளி தலைமை ஆசிரியர் காமத் தலைமை வகித்தார் கல்வி குழு தலைவர் ரேவதி துணைத்தலைவர் அப்துல் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.பேரணியில் ஆறாம் வகுப்பு முதல் ஒன்பதாம் வகுப்பு மாணவர்கள் கலந்து கொண்டனர்.
நகரின் முக்கிய வீதிகள் வழியாக சென்ற பேரணியில் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு அரசு வழங்கும் சலுகைகள் குறித்து தெரிவித்து அவர்களை பள்ளியில் சேர்க்க வேண்டியதன் அவசியம் குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் கிருஷ்ணன், வட்டார வளமைய மேற்பார்வையாளர் முருகன், சிறப்பு ஆசிரியர்கள், பயிற்றுநர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
ஆரணி : ஆரணியில் மாற்றுத்திறனாளி குழந்தைகளை பள்ளியில் சேர்க்க வலியுறுத்தி பள்ளி மாணவ, மாணவிகள் விழிப்புணர்வு பேரணி நடத்தினர். ஆரணி அருணகிரி சத்திரம் கண்ணப்பன் தெருவில் நகராட்சி உயர்நிலைப்பள்ளி அமைந்துள்ளது. இந்த பள்ளி மாணவ, மாணவிகள் மாற்றுத்திறனாளி குழந்தைகளை பள்ளியில் சேர்க்க வலியுறுத்தி விழிப்புணர்வு பேரணி நடத்தினர்.
பேரணிக்கு தலைமை ஆசிரியர் எல்.தேவராசி தலைமை வகித்தார். நகராட்சி தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் மோகன்ராஜ், பள்ளி மேலாண்மை குழு தலைவர் ஜெயந்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கான சிறப்பு பயிற்றுனர்கள் அ.பாரத் ரத்னா, சுமதி ஆகியோர் அனைவரும் வரவேற்றனர். நகரராட்சி உறுப்பினர்கள் அமுதா ஆறுமுகம், கே. எஸ்.சிவகுமார் ஆகியோர் கலந்து கொண்டு விழிப்புணர்வு பேரணியை தொடக்கி வைத்தனர்.
பள்ளி மாணவர்கள் கோஷங்களை எழுப்பியும், மாற்றுத்திறனாளி குழந்தைகளை பள்ளியில் சேர்த்தல் வலியுறுத்தி பதாகைகள் கையில் ஏந்தியும் சென்றனர். பேரணியானது அருணகிரி சத்திரம், சபாஷ் கான் தெரு, பூந்தோட்டம் காண்ட்ராக்டர் பொன்னுசாமி தெரு வழியாக மீண்டும் பள்ளியை வந்தடைந்தது. பேரணியில் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர். முன்னதாக விழிப்புணர்வு பேரணியில் பள்ளி மாணவர்கள் உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu