செங்கத்தில் மாவட்ட அளவிலான கபடிப் போட்டி
வெற்றி பெற்ற வீரர்களுக்கு கோப்பையும் சான்றிதழ்களும் வழங்கப்பட்டன
திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த தீதாண்டபட்டு ஊராட்சியில் 52 ஆம் ஆண்டு கபடி போட்டி ஊர் பொதுமக்கள் மற்றும் விழா குழுவினர் இளைஞர்கள் சார்பில் ஊராட்சி மன்ற தலைவர் ஏழுமலை தலைமையில் மாரியம்மன் கோவில் அருகில் உள்ள விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது.
இந்தப் போட்டியில் தமிழகத்தில் உள்ள பல்வேறு மாவட்டங்களில் இருந்து கபடி வீரர்கள் கலந்து கொண்டனர்.
போட்டியின் இறுதி சுற்று வரை விளையாடிய திருப்பூர், விழுப்புரம், சேலம் ஆகிய மாவட்டங்களை சேர்ந்த வீரர்களும் மற்றும் தீ தாண்டப்பட்டு ஊராட்சியை சேர்ந்த விநாயகா ஸ்போர்ட்ஸ் கிளப் வீரர்களும் முதல் நான்கு இடங்களை பிடித்து வெற்றி பெற்று தங்களுடன் மோதிய எதிர் அணி வீரர்களை தோற்கடித்து சாதனை படைத்தனர்.
இதில் முதலிடம் பிடித்த திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்த வீரர்களுக்கு ஊராட்சி மன்ற தலைவர் ஏழுமலை ஓய்வு பெற்ற காவல் உதவி ஆய்வாளர் கருணாகரன் தனியார் பால் கொள்முதல் முகவர் பரந்தாமன், ஊராட்சி மன்ற துணைத் தலைவர் ஜோதி குபேந்திரன் ஆகியோர் ரூபாய் 20000 ரொக்க பரிசாக வழங்கினர்.
இரண்டாம் இடம் மூன்றாமிடம் நான்காமிடம் பிடித்த அணிகளுக்கு பரிசுத்தொகை வழங்கப்பட்டது.
முதல் இரண்டு இடங்களை பிடித்த வீரர்களுக்கு ஸ்போர்ட்ஸ் கிளப் அறிவழகன் நினைவாக ரூபாய் 30,000 மதிப்புள்ள கோப்பையும் மூன்றாம் இடம் பிடித்த வீரர்களுக்கு தமிழரசன் அருண்குமார் சார்பாக ரூபாய் 10,000 மதிப்புள்ள கோப்பையும் நான்காம் இடம் பிடித்த வீரர்களுக்கு மணிகண்டன் சார்பாக ரூபாய் 7000 மதிப்புள்ள கோப்பையும் சான்றிதழ்களும் வழங்கப்பட்டன.
இந்நிகழ்ச்சியில் விளையாட்டு வீரர்கள் ஊர் பொதுமக்கள் உள்ளிட்ட ஏராளமான கலந்து கொண்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu