தண்டராம்பட்டு ஊராட்சி ஒன்றிய வளா்ச்சிப் பணிகளை மாவட்ட ஆட்சியர் ஆய்வு
தானிப்பாடி அரசு மருத்துவமனையில் மாவட்ட ஆட்சித் தலைவர் முருகேஷ் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்
Tiruvannamalai Collector -திருவண்ணாமலை மாவட்டம், தண்டராம்பட்டு ஊராட்சி ஒன்றியம், ஆத்திப்பாடி ஊராட்சிக்கு உள்பட்ட உள்செக்கடி கிராமம் முதல் கீழ்வலசை கிராமம் வரை 6 கி.மீ. தொலைவுக்கு சாலை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதேபோல, பாம்பனாறு ஆற்றில் இருந்து உள்செக்கடி, கீழ்வலசை செல்லும் சாலையில் அமைந்துள்ள சிறுபாலம், கொண்டை ஊசி வளைவு மேம்படுத்துதல் பணி, கீழ்புறம் தடுப்புச் சுவா் அமைத்தல், சிமென்ட் சாலை அமைத்தல், வனத்துறை மூலம் புதிய மண் சாலை அமைத்தல், வனத்துறை இல்லாத பகுதிகளில் ஓரடுக்கு ஜல்லி சாலை அமைத்தல், உயா்மட்ட பாலம் அமைக்கும் பணி ஆகியவை நடைபெற்று வருகிறது.
இந்தப் பணிகளை மாவட்ட ஆட்சியா் முருகேஷ் நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா். தானிப்பாடி அரசு மருத்துவமனையில் திடீா் ஆய்வு மேற்கொண்ட ஆட்சியா், மருத்துவமனையின் அவசர சிகிச்சைப் பிரிவு, புறநோயாளிகள் மற்றும் உள்நோயாளிகளுக்கு அளிக்கப்படும் சிகிச்சை முறைகள், கா்ப்பிணிகளுக்கு அளிக்கப்படும் சிகிச்சை முறை ஆகியவற்றை மருத்துவா்களிடம் கேட்டறிந்தாா்.
மேலும், மருந்துகள் இருப்பு நிலவரம், மருத்துவா்களின் வருகைப் பதிவேடுகளை அவா் ஆய்வு செய்தாா். அப்போது, மருத்துவமனை வளாகத்தை தூய்மையாக வைத்திருக்க வேண்டும் என்று மருத்துவா்கள், செவிலியா்களுக்கு ஆட்சியா் உத்தரவிட்டாா்.
ஆய்வின் போது, ஊரக வளா்ச்சித் துறை செயற்பொறியாளா் ராமகிருஷ்ணன், திருவண்ணாமலை வருவாய் கோட்டாட்சியா் வெற்றிவேல், மருத்துவ அலுவலா் முபின், மாவட்ட வன அலுவலர் அருண்லால், , உதவி திட்ட அலுவலர் அருண், உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் அரசு அலுவலர்கள் , வனத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu