செங்கம் பகுதிகளில் வீடுகள் தோறும் தேசிய கொடி விநியோகம்

செங்கம் பகுதிகளில் வீடுகள் தோறும் தேசிய கொடி விநியோகம்
X

பேரூராட்சி சார்பில் செயல் அலுவலர் உமாமகேஸ்வரி தலைமையில் வீடுகள் தோறும் தேசியக்கொடி வழங்கப்பட்டது.

செங்கம் தேர்வு நிலை பேரூராட்சி சார்பில் வீடுகள் தோறும் தேசிய கொடி விநியோகம் செய்யப்பட்டது.

75-வது ஆண்டு சுதந்திர தினத்தை முன்னிட்டு மூன்று நாட்களுக்கு பொதுமக்கள் இந்திய தேசிய கொடியை ஏற்றி கொண்டாட வேண்டும் என்ற அறிவிப்பு வெளியானதை தொடர்ந்து செங்கம் தேர்வு நிலை பேரூராட்சி சார்பில் செயல் அலுவலர் உமாமகேஸ்வரி தலைமையில் வீடுகள் தோறும் தேசியக்கொடி வழங்கப்பட்டது.

அப்போது பேரூராட்சி அலுவலர்கள், துப்புரவு பணியாளர்கள் பொதுமக்கள் உடன் இருந்தனர்.

புதுப்பாளையம் தேர்வு நிலை பேரூராட்சி சார்பில் செயல் அலுவலர் உஸ்னாபி தலைமையில் வீடுகள் தோறும் தேசியக்கொடி வழங்கப்பட்டது. அப்போது இளநிலை எழுத்தர் ரமேஷ், பேரூராட்சி அலுவலர்கள், துப்புரவு பணியாளர்கள் பொதுமக்கள் உடன் இருந்தனர்.

Tags

Next Story
அதிமுக ஆட்சியில் செயல்படுத்தப்பட்ட மக்கள் நலத் திட்டங்களை விளக்கி ராசிபுரத்தில் பிரசாரம்-முன்னாள் அமைச்சா் பி.தங்கமணி