அரசு பணியாளர்கள் கூட்டுறவு சங்கத்தில் ரூ.2.5 கோடி கடன் வினியோகம்

ஆசிரியர்களுக்கு ரூ.2 கோடியே 5 லட்சத்திற்கான கடன் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
திருவண்ணாமலை மாவட்ட கூட்டுறவு கடன் சங்கத்தில் ஆசிரியர்களுக்கு ரூ.2 கோடியே 5 லட்சத்திற்கான கடன் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது
திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அருகே புதுப்பாளையம் ஒன்றியத்தில் உள்ள ஆசிரியர்கள், அரசு பணியாளர்கள் கூட்டுறவு கடன் சங்கத்தில் ஆசிரியர்களுக்கு ரூ.2 கோடியே 5 லட்சத்திற்கான கடன் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு ஆசிரியர்கள் அரசு ஊழியர்கள் கூட்டுறவு கடன் சங்க தலைவர் செந்தில்குமார் தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பாளராக புதுப்பாளையம் ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர் சுந்தரபாண்டியன் கலந்து கொண்டார்.
தொடர்ந்து ஆசிரியர்களுக்கு ரூ.2 கோடியே 5 லட்சம் கடன்களுக்கான காசோலைகளை புதுப்பாளையம் ஒன்றிய குழு தலைவர் சுந்தர பாண்டியன் வழங்கி சிறப்புரையாற்றினார். கூட்டுறவு கடன் சங்க துணை தலைவர் சண்முகம், நிர்வாக குழு உறுப்பினர்கள் ஏழுமலை, தண்டபாணி, ஜூலியானமேரி, பவுலியானமேரி, ஆதிமூலம், வினோத்குமார், எழிலரசன், புதுப்பாளையம் பேரூராட்சி செயலாளர் சீனிவாசன், ஊராட்சி மன்ற தலைவர் சுந்தரம் உள்பட 50க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். முடிவில் கூட்டுறவு சங்க செயலாளர் சரவணன் நன்றி கூறினார்.
திட்ட விளக்கக் கூட்டம்
கீழ்பென்னாத்தூர் ஊராட்சி ஒன்றிய அலுவலக கூட்டரங்கில் தாழ்த்தப்பட்ட பழங்குடியின வகுப்பு மற்றும் கிராம ஊராட்சி மன்ற பெண் தலைவர்களுக்கான திட்ட விளக்கக் கூட்டம் நடந்தது.
வட்டார வளர்ச்சி அலுவலர் பாண்டியன் தலைமை தாங்கினார். துணை வட்டார வளர்ச்சி அலுவலர் சங்கரசண்முகம் வரவேற்றார். இதில் பயிற்சி நடத்துனர் ஏழுமலை கலந்து கொண்டு ஊராட்சியில் அனைத்து திட்டப்பணிகளையும் எவ்வாறு மேற்கொள்வது என்பது குறித்தும், நிர்வாகம் நடத்தும் முறைகள் குறித்தும் பயிற்சி அளித்தார்.
அப்போது ஊராட்சி மன்ற தலைவர்களின் சந்தேகங்களுக்கு விளக்கம் அளிக்கப்பட்டது. முடிவில் இளநிலை உதவியாளர் காண்டீபன் நன்றி கூறினார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu