தண்டராம்பட்டு ஊராட்சியில் வளர்ச்சி பணிகள் துவக்கம்

தண்டராம்பட்டு ஊராட்சியில் வளர்ச்சி பணிகள் துவக்கம்
X

வளர்ச்சிப் பணிகளை பூமி பூஜை செய்து தொடங்கி வைத்த செங்கம் எம்எல்ஏ கிரி

தண்டராம்பட்டு ஊராட்சியில் வளர்ச்சி பணிகளை எம்எல்ஏ தொடங்கி வைத்தார்.

தண்டராம்பட்டு ஊராட்சியில் உள்ள தாராப்பட்டு ஒன்றியத்தில் ரூபாய் மூன்று கோடி மதிப்பீட்டில் வளர்ச்சி திட்டப் பணிகளை செங்கம் எம்எல்ஏ கிரி தொடங்கி வைத்தார்.

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் தொகுதி தண்டராம்பட்டு ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட தரடா பட்டு ஊராட்சியில் முத்தாலம்மன் கோயில் திருப்பணி , கூட்ரோடு சாலை, மேல்நிலை நீர் சேர்க்கத் தொட்டி, பேருந்து நிலைய பயணியர் நிழற்குடை, அரசினர் உயர்நிலைப்பள்ளி செப்பனிடுதல், சிமெண்ட் சாலை, பேவர் பிளாக் சாலை, அங்கன்வாடி மையம் உள்ளிட்ட பணிகளுக்கு பூமி பூஜை செய்து பணிகள் தொடக்க விழா மற்றும் புதிய நியாய விலை கடை திறப்பு விழா நடைபெற்றது.

தண்டராம்பட்டு ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் பரிமளா கலையரசன் தலைமை தாங்கினார்.

ஒன்றிய செயலாளர் ரமேஷ், ஆதிதிராவிடர் நலக்குழு அமைப்பாளர் வேலு, ஆகியோர் முன்னிலை வகித்தனர். தேர்தல் பணி குழு தலைவர் கார்த்திகேயன் அனைவரையும் வரவேற்றார்.

நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக செங்கம் சட்டமன்ற உறுப்பினர் கிரி கலந்து கொண்டு ரூபாய் மூன்று கோடி மதிப்பிலான வளர்ச்சி திட்ட பணிகளுக்கு பூமி பூஜை செய்து பணியை தொடங்கி வைத்து பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி சிறப்புரையாற்றினார்.

அதனைத் தொடர்ந்து செங்கம் தொகுதி தண்டராம்பட்டு ஒன்றியம் அகரம் பள்ளிப்பட்டு முதல் தென்முடியனூர் வரை தார் சாலை அமைக்கும் பணி ரூபாய் 2.92 கோடி மதிப்பீட்டில் தொடங்க உள்ளது. இப்பணியில் செங்கம் சட்டமன்ற உறுப்பினர் கிரி அவர்கள் பூமி பூஜை செய்து தொடங்கி வைத்தார்கள்.

இதில் தண்டராம்பட்டு வட்ட வழங்கல் அலுவலர் சாந்தி கூட்டுறவுத் துறை செயலாளர் மணிவண்ணன், தண்டராம்பட்டு உழவர் பணி கூட்டுறவு கடன் சங்க செயலாளர் காமராஜ், காசாளர் சுதா, சாத்தனூர் அணை பாசன திட்ட குழு தலைவர் ஜெயராமன், கிளைச் செயலாளர்கள் பரந்தாமன், யாசின், மற்றும் அரசு அலுவலர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள், ஒன்றிய செயலாளர்ள், ஒன்றிய குழு தலைவர்கள், ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் ,பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Next Story