செங்கம் அருகே நாட்டு வெடிகுண்டை கடித்த பசுவின் வாய் சிதைந்தது

செங்கம் அருகே நாட்டு வெடிகுண்டை கடித்த பசுவின் வாய் சிதைந்தது
X

வெடிகுண்டை  கடித்து தாடை சிதறிய மாடு 

செங்கம் அருகே வனவிலங்குகளை வேட்டையாட வைத்த நாட்டு வெடிகுண்டை கடித்த பசுவின் வாய் சிதைந்தது

திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் அடுத்த புதுப்பாளையம் அருகே நரசிங்கநல்லூர், வாசுதேவன்பட்டு ஆகிய பகுதிகளை உள்ளடக்கிய காப்புக்காடு உள்ளது.

இந்த வனப்பகுதியில் மர்ம கும்பல் நாட்டு வெடிகுண்டுகளை வைத்து வனவிலங்குகளை வேட்டையாடி வருகின்றனர். அப்பகுதியை சேர்ந்த விவசாயிகள் தங்களது மாடுகளை வாசுதேவன்பட்டு வனப்பகுதியை ஒட்டியுள்ள காட்டில் மேய்ச்சலுக்காக விட்டிருந்தனர். அப்போது, அங்கு வனவிலங்குகளை வேட்டையாடுவதற்காக மர்ம நபர்கள் வைத்திருந்த நாட்டு வெடிகுண்டை ஒரு பசுமாடு கடித்துள்ளது. இதில் நாட்டு வெடிகுண்டு வெடித்து பசுவின் வாய் சிதைந்து ரத்தம் வடிந்து கொண்டிருந்தது. இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த விவசாயிகள், பசுவை சிகிச்சைக்காக கால்நடை மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்.

இதுகுறித்து தகவலறிந்த பாச்சல் போலீசார் மற்றும் வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். மேலும் வழக்குப்பதிந்து நாட்டு வெடிகுண்டு வைத்த மர்ம ஆசாமிகளை தேடி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதி மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

Tags

Next Story
ai future project