திருமண மண்டபம், திரையரங்கு உரிமையாளருக்கு அறிவுறுத்தல்
X
By - S.R.V.Bala Reporter |25 April 2021 8:30 AM IST
செங்கம் பகுதி திருமண மண்டபம், திரையரங்கு உரிமையாளருக்கு கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து அதிகாரிகள் அறிவுறுத்தல்
திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் சுற்றுப்பகுதியில் உள்ள திருமண மண்டபங்கள் மற்றும் திரையரங்குகளை கொரோனா தொற்று தடுப்பு முன் நடவடிக்கையாக மாவட்ட ஆட்சியர் சந்தீப்நந்தூரி உத்தரவின் பேரில் மாவட்ட தனி துணை ஆட்சியர் வெங்கடேசன், தேர்வுநிலை பேரூராட்சி செயல் அலுவலர் லோகநாதன், வட்டார மருத்துவ அலுவலர் மரு.இளவரசி ஆகிய ஆய்வு குழுவினர்கள் ஆய்வு செய்தனர்.
திருமண மண்டபம் மற்றும் திரையரங்கு உரிமையாளர்களிடம் திருமண நாட்களிலும் மற்றும் திரையரங்கத்தில் 50 சதவீதம் பார்வையாளர்களை அனுமதித்தல், தனிமனித இடைவெளி, முகக்கவசம், கையுறை, கிருமிநாசினி போன்ற பல்வேறு தடுப்பு நடவடிக்கை பின்பற்றுதல் மற்றும் பயன்படுத்துதல் போன்ற நடவடிக்கைகளை தெரிவித்தார்கள்.
Next Story
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu