ஆதிதிராவிடர் நல பள்ளியில் கூடுதல் கட்டிடம் கட்டுவதற்கான பணிகள் துவக்கம்

ஆதிதிராவிடர் நல பள்ளியில் கூடுதல் கட்டிடம் கட்டுவதற்கான பணிகள் துவக்கம்
X

பூமி பூஜை செய்து பணிகளை துவக்கி வைத்த கிரி எம் எல் ஏ

செங்கம் பகுதியில் ஆதிதிராவிடர் நலப் பள்ளியில் கூடுதல் கட்டிடம் கட்டுவதற்கான பணிகளை எம்எல்ஏ கிரிதுவக்கி வைத்தார்.

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் தொகுதி கீழ் வணக்கம்பாடி ஊராட்சியில் ஆதிதிராவிடர் நலப் பள்ளிக்கு ரூபாய் 30 லட்சம் மதிப்பில் கூடுதல் கட்டிடம் கட்டும் பணிக்கு பூமி பூஜை நடைபெற்றது.

செங்கம் சட்டமன்றத் தொகுதி தண்டராம்பட்டு ஊராட்சியில் தண்டராம்பட்டு மத்திய ஒன்றியம் கீழ் வணக்கம்பாடி ஒன்றியத்தில் ஆதிதிராவிடர் நலப் பள்ளியில் ரூபாய் 30 லட்சம் மதிப்பில் கூடுதல் கட்டிடம் கட்ட நடைபெற்ற பூமி பூஜை நிகழ்ச்சியில் செங்கம் சட்டமன்ற உறுப்பினர் கிரி கலந்து கொண்டு பூமி பூஜை செய்து பணிகளை துவக்கி வைத்தார்.

இந்நிகழ்வில் ஒன்றிய கழக செயலாளர் ரமேஷ் , ஒன்றிய அவைத்தலைவர் வணங்காமுடி, ஒன்றிய குழு பெருந்தலைவர் பரிமளா கலையரசன், துணைச் செயலாளர்கள், மாவட்ட பிரதிநிதிகள், நகர செயலாளர், அரசு ஒப்பந்தக்காரர்கள், கூட்டுறவு சங்க தலைவர் மற்றும் உறுப்பினர்கள் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

புதிய பயணியர் பயணியர் நிழற் கூடத்தையும் எம் எல் ஏ திறந்து வைத்தார்.

செங்கம் சட்டமன்றத் தொகுதி தண்டராம்பட்டு அரசு மருத்துவமனை பேருந்து நிறுத்தத்தில் சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியின் மூலம் கட்டப்பட்டுள்ள புதிய பயணியர் நிழற் கூடம் திறப்பு விழா நடைபெற்றது, ஒன்றிய செயலாளர் ரமேஷ் தலைமை வகித்தார்.

இதில் செங்கம் சட்டமன்ற உறுப்பினர் கிரி கலந்து கொண்டு புதிய பயணியர் நிழற்கூடத்தை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார்.

இந்நிகழ்ச்சியில் ஒன்றிய குழு தலைவர் பரிமளா , ஒன்றிய துணைச் செயலாளர் பன்னீர் செல்வம், ஊராட்சி மன்ற தலைவர் காமராஜ், ஊராட்சி மன்ற துணைத் தலைவர் பரமேஸ்வரி மற்றும் தேர்தல் பணி குழு உறுப்பினர்கள், தண்டராம்பட்டு ஒன்றிய குழு உறுப்பினர்கள், தென்முடியனூர் ஒன்றிய குழு உறுப்பினர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள், அரசு அலுவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
ஈரோடு: வயதான தம்பதி மீது மோட்டார் சைக்கிளில் மோதிய கூலி தொழிலாளி பலி