செங்கம் அருகே செல்போன் டவர் மீது ஏறி கண்டக்டர் தற்கொலை மிரட்டல்

செங்கம் அருகே செல்போன் டவர் மீது ஏறி கண்டக்டர் தற்கொலை மிரட்டல்
X

செல்போன் டவரில் ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்த கண்டக்டர்.

செங்கம் அருகே செல்போன் டவர் மீது ஏறிய கண்டக்டர் தற்கொலை மிரட்டல் விடுத்தது பரபரப்பை ஏற்படுத்தியது.

செங்கம் அருகே உள்ள புதுப்பாளையம் ஒன்றியத்திற்கு உட்பட்ட முத்தனூர் பகுதியை சேர்ந்தவர் கார்த்தி (வயது 45). இவர் அரசு போக்குவரத்து கழகத்தில் கண்டக்டராக பணியாற்றி வருகிறார்.

இவர் நிலம் வாங்குவதற்காக அதே ஊரில் அவரது உறவினர்களிடம் முன்பணம் கொடுத்துள்ளதாக கூறப்படுகிறது. ஆனால் பேசியபடி நிலத்தை கார்த்திக்கு விற்பனை செய்யாமல் வேறு ஒருவருக்கு உறவினர் விற்பனை செய்ததாக கூறப்படுகிறது.

இதனால் ஆத்திரமடைந்த கார்த்தி அதனை கண்டித்து, முத்தனூர் பகுதியில் உள்ள செல்போன் டவர் மீது ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்தார். இந்த சம்பவம் குறித்து புதுப்பாளையம் காவல்துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டது.

சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற புதுப்பாளையம் போலீசார் கார்த்தியிடம் சமரச பேச்சுவார்த்தை நடத்தியதை தொடர்ந்து அவர் கீழே இறங்கி வந்தார். அவருக்கு போலீசார் அறிவுரை கூறி அனுப்பி வைத்தனர்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!