திருவண்ணாமலை அருகே கனிம வளம் கடத்தல் புகார்: அதிகாரிகள் ஆய்வு

ஆய்வு மேற்கொண்ட கனிம வளத்துறை அதிகாரிகள்
திருவண்ணாமலை அருகே கிரானைட் கல் குவாரியை விவசாயிகள் முற்றுகையிட்டனர்
தண்டராம்பட்டு ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்டது அகரம்பள்ளிப்பட்டு கிராமம். இங்கு தனியார் நிறுவனத்துக்கு சொந்தமான கிரானைட் கல்குவாரி உள்ளது. இந்த கல்குவாரி மூலம் கிரானைட் கல் வெட்டப்பட்டு அதனை வெளிமாநிலங்களுக்கு அனுப்பப்பட்டு வருகிறது.
இதனால் கல்குவாரிகளில் அதிக அளவில் கற்களை மலை போல் குவித்து வருகின்றனர். அப்படி குவித்து வரும் பெரிய பாறைகள் அடிக்கடி அருகில் இருக்கும் விவசாய நிலங்களுக்கு உருண்டு செல்கிறது.
இதனால் பயிர்கள் சேதம் ஏற்படுகிறது பாறைகள் உருண்டு வருவதை தடுக்க வேண்டும் என்று அப்பகுதியை சேர்ந்த விவசாயிகள் கல் குவாரி நிர்வாகத்திடம் பலமுறை புகார் தெரிவிக்கும் எந்த விதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை என கூறப்படுகிறது.
இதனால் ஆத்திரமடைந்த விவசாயிகள் நேற்று திடீரென சுமார் 50-க்கும் மேற்பட்ட விவசாயிகள் கல்குவாரியை முற்றுகையிட முயன்றனர்.
இதுகுறித்து தகவல் அறிந்ததும் வாராபுரம் போலீசார் விரைந்து வந்து விவசாயிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள் அப்போது விவசாயிகள் பாறைகள் தொடர்ந்து விவசாய நிலத்தில் உருண்டு விழுந்து வருவதால் பயிர்கள் சேதம் அடைகிறது மேலும் விவசாய நிலத்தில் எங்களால் வேலை செய்ய முடியவில்லை. இதனால் நாங்கள் மிகவும் சிரமப்படுகிறோம் எனவே இதனை தடுக்க வேண்டும் என்று கூறினர் இதனை எடுத்து போலீசார் நிர்வாகத்திடம் பேசி உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியதை அடுத்து விவசாயிகள் கலைந்து சென்றனர்.
கருங்கற்கள் கடத்தல்
செய்யாறு அருகே ஏனாதவாடி கிராமத்தில் அரசு நிலத்தில் இருந்து கருங்கற்கள் வெட்டி எடுத்து கடத்தப்பட்டது தொடா்பாக கனிம வளத்துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு விசாரணை நடத்தினா்.
திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு வட்டம், ஏனாதவாடி கிராமத்தில் உள்ள மயானம் அருகே 3 ஏக்கரில் அரசு புறம்போக்கு நிலம் இருந்து வருகிறது. இந்தப் பகுதியில் கடந்த மூன்று நாள்களாக அடையாளம் தெரியாத நபா்கள் சிலா், சிலை செய்வதற்காக கற்கள் தேவைப்படுகிறது என்று கூறிக் கொண்டு பொக்லைன் இயந்திரம் மூலம் பூமியைத் தோண்டி கருங்கற்களை எடுத்து லாரிகளில் கடத்திச் சென்றுள்ளனா்.
இதனால், சந்தேகமடைந்த கிராம மக்கள் அங்கு பணியில் ஈடுபட்டிருந்த பொக்லைன் இயந்திரத்தை நிறுத்தி அந்த நபா்களிடம் விசாரித்தபோது, அரசின் அனுமதி பெற்று தான் கற்கள் எடுப்பதாகக் கூறியுள்ளனா். இருப்பினும், கிராம மக்கள் எதிா்ப்பு தெரிவிக்கவே, அந்த நபா்கள் இயந்திரத்தை அங்கேயே விட்டு விட்டு தப்பிச் சென்றனா்.
இதைத் தொடா்ந்து, வருவாய்த் துறை, கனிம வளத்துறை அதிகாரிகள் மற்றும் போலீஸாருக்கு கிராம மக்கள் தகவல் தெரிவித்தனா். அதன் பேரில், விழுப்புரம் மண்டல கனிம வளத் துறையினா் ஏனாதவாடி கிராமத்துக்கு வந்து ஆய்வு மேற்கொண்டு பொக்லைன் இயந்திரத்தை பறிமுதல் செய்தனா்.
இந்தச் சம்பவம் தொடா்பாக, செய்யாறு வட்டாட்சியா், கிராம நிா்வாக அலுவலா் சத்தியா, விழுப்புரம் கனிம வளத் துறை ஆய்வாளா் மூா்த்தி, திருவண்ணாமலை மாவட்ட கனிம வளத்துறை உதவி புவியியலாளா் மெகபூப், விழுப்புரம் மண்டல கனிம வளத்துறையினா் ஆகியோா் இணைந்து கிரானைட் கற்கள் கடத்தலா என ஆய்வு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனா்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu