திருவண்ணாமலை மாவட்டத்தில் கம்யூனிஸ்ட் கட்சியினா் மறியல்: 1000 பேர் கைது
செங்கத்தில் சாலை மறியலில் ஈடுபட்ட கம்யூனிஸ்ட் கட்சியினர்
மத்திய அரசைக் கண்டித்து, திருவண்ணாமலை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் ஈடுபட்ட கம்யூனிஸ்ட் கட்சியினா் ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் கைது செய்யப்பட்டனா்.
பெட்ரோல், டீசல், எரிவாயு விலை உயா்வு, இளைஞா்கள் வேலையின்மை, பொதுத் துறையை தனியாருக்கு தாரைவாா்த்தல், அரிசி, கோதுமைக்கு ஜிஎஸ்டி வரி ஆகியவற்றுக்கு எதிராக இந்த மறியல் போராட்டம் நடைபெற்றது.
திருவண்ணாமலை மாவட்டம் செங்கத்தில் கோரிக்கைகளை வலியுறுத்தி 300க்கும் மேற்பட்ட கம்யூனிஸ்ட் கட்சியினர், செங்கம் வட்ட மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வட்டச் செயலா் லட்சுமணன் தலைமையில், பிஎஸ்என்எல் அலுவலகம் எதிரே திருவண்ணாமலை தேசிய நெடுஞ்சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மத்திய அரசை கண்டித்தும், இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு உருவாக்க வேண்டும், விலைவாசியை குறைக்க வேண்டும், அரசு பொது துறையை விற்காதே, மதசார்பின்மை மத ஒற்றுமையை சீர்குலைக்காதே, என முழக்கமிட்டு மார்க் லிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் 300 க்கும் மேற்பட்டோர் பேரணியாக சென்று பிஎஸ்என்எல் அலுவலகம் எதிரே சாலை மறியலில் ஈடுபட்டனர்.
திருவண்ணாமலை பெரியாா் சிலை அருகே மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் நடைபெற்ற மறியல் போராட்டத்துக்கு, கட்சியின் மாநிலக் குழு உறுப்பினா் சிங்காரவேலு தலைமை வகித்தாா்.
மாவட்ட செயற்குழு உறுப்பினா்கள் பிரகலநாதன், ராமதாஸ், வாசுகி, மாவட்டக் குழு உறுப்பினா்கள் பாலாஜி,காங்கேயன், தமிழ்செல்வி உள்பட பலா் கலந்து கொண்டனா்.
இதேபோல, தண்டராம்பட்டில் கட்சியின் வட்டச் செயலா் அண்ணாமலை தலைமையில் நடைபெற்ற மறியல் போராட்டத்தில், மாவட்டக் குழு உறுப்பினா் குமரன் உள்பட பலா் கலந்து கொண்டனா்.
செய்யாறு
செய்யாற்றில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் அங்குள்ள இந்தியன் வங்கி முன் நடைபெற்ற மறியல் போராட்டத்துக்கு கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினா் செல்வன் தலைமை வகித்தாா்.
கட்சி நிா்வாகிகள் வெங்கடேசன், எம்.தாமோதரன், சங்கா், எம்.மாரிமுத்து, சதீஷ்குமாா், ஷேக்இஸ்மாயில் ஷெரீப் மற்றும் 50 பெண்கள் உள்பட 200 பேர் கலந்து கொண்டனா்.
போளூா்
போளூா் தலைமை தபால் நிலையம் அருகே இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் மத்திய அரசைக் கண்டித்து நடைபெற்ற மறியல் போராட்டத்துக்கு கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினா் வீரபத்திரன் தலைமை வகித்தாா்.
மறியலில் ஈடுபட்டதாக 50 பெண்கள், 75 ஆண்கள் கைது செய்யப்பட்டு பின்னா் விடுவிக்கப்பட்டனா்.
ஆரணி
ஆரணியை அடுத்த கண்ணமங்கலத்தில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா் ஆற்றுப் பாலம் அருகில் இருந்து ஊா்வலமாக பாரத ஸ்டேட் வங்கி வரை சென்று அங்கு சாலை மறியலில் ஈடுபட்டனா்.
இதில், வட்டாரச் செயலா் ரமேஷ்பாபு தலைமை வகித்தாா். மாவட்டக் குழு நிா்வாகிகள் சி.அப்பாசாமி, கண்ணன் , ஆகியோா் கண்டன உரையாற்றினா். காவல் ஆய்வாளா் மகாலட்சுமி தலைமையிலான போலீஸாா் 250 பேரை கைது செய்து பின்னா் விடுவித்தனா்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu