/* */

திருவண்ணாமலை: அனைத்து கிராம வேளாண் வளர்ச்சி திட்டப்பணிகள் துவக்கம்

வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் திருவண்ணாமலை மாவட்டத்தில் 122 கிராம பஞ்சாயத்துக்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளது.

HIGHLIGHTS

திருவண்ணாமலை: அனைத்து கிராம வேளாண் வளர்ச்சி திட்டப்பணிகள் துவக்கம்
X

செங்கம் சட்டமன்ற உறுப்பினர் மு. பெ. கிரி கலந்து கொண்டு விவசாயிகளுக்கு வேளாண் இடுபொருட்கள் வழங்கினார்.

திருவண்ணாமலை மாவட்டத்தில் 2021-22-ம் ஆண்டிற்கான கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் 122 கிராம பஞ்சாயத்துக்கள் தேர்வு செய்யப்பட்டு செயல்படுத்தப்பட உள்ளது.

இந்த திட்டத்தில் தேர்வு செய்யப்பட்ட அனைத்து கிராம பஞ்சாயத்துக்களிலும் உள்ள தரிசு நிலங்களை சாகுபடிக்கு கொண்டு வந்து நீராதாரங்களை பெருக்கி வேளாண்மை உற்பத்தி திறன் மற்றும் உற்பத்தியை பெருக்கி வேளாண் விளை பொருட்களை மதிப்பு கூட்டி சந்தைபடுத்தி கிராம பொருளாதாரத்தின் ஒட்டு மொத்த வளர்ச்சிக்காக இத்திட்டத்தினை தமிழக முதல்- அமைச்சர் தமிழகம் முழுவதும் காணொலி காட்சி மூலமாக தலைமை செயலகத்தில் இருந்து தொடங்கிவைத்தார்.

இதனைத் தொடர்ந்து திருவண்ணாமலை மாவட்டத்தில் தண்டராம்பட்டு வட்டாரம் கீழ்வணக்கம்பாடி கிராமத்தில் நடைபெற்ற கலைஞரின் அனைத்து கிராம வேளாண் வளர்ச்சி திட்ட துவக்க விழாவில் செங்கம் சட்டமன்ற உறுப்பினர் மு. பெ. கிரி கலந்து கொண்டு விவசாயிகளுக்கு வேளாண் இடுபொருட்கள் வழங்கினார்.

விழாவிற்கு வேளாண் உதவி இயக்குநர் த. ராம்பிரபு தலைமை தாங்கினார். விழாவில் ஒன்றிய குழு தலைவர் பரிமளா கலையரசன் வட்டாட்சியர் பரிமளம், அட்மா தலைவர் ஜோதி, மாவட்ட ஊராட்சி உறுப்பினர் சத்யா வெங்கடேசன் , ஒன்றிய குழு உறுப்பினர் மணிமேகலை ஸ்ரீதர் ஊராட்சி மன்ற தலைவர் குமார் ஆகியோர் கலந்து கொண்டனர். தோட்டக்கலை உதவி இயக்குநர் கங்கா ராமஜெயம் நன்றி கூறினார். விழா ஏற்பாடுகளை உதவி விதை அலுவலர் சசி வேளாண் உதவி அலுவலர் இளங்கோ ஆகியோர் மேற்கொண்டிருந்தனர்.

Updated On: 23 May 2022 8:48 AM GMT

Related News

Latest News

  1. திருப்பூர்
    திருப்பூருக்கு முதலிடம் கிடைக்குமா? - பிளஸ் 2 தேர்வு முடிவு நாளை...
  2. உடுமலைப்பேட்டை
    மழை வேண்டி வன தேவதைகளுக்கு விழா எடுத்த மலைவாழ் மக்கள்
  3. லைஃப்ஸ்டைல்
    அலட்சியம்: தோல்விக்கான பாதையை நோக்கிய ஒரு பயணம்
  4. நாமக்கல்
    நாமக்கல்லில் 11 மையங்களில் நீட் தேர்வு 6,180 பேர் பங்கேற்பு: 120 பேர்...
  5. கவுண்டம்பாளையம்
    தடாகம் பகுதியில் 12 கிலோ கஞ்சா பறிமுதல் ; இருவர் கைது
  6. லைஃப்ஸ்டைல்
    மின்விசிறியா அல்லது காற்றூதியா? மின்சாரம் சேமிப்பது எது?
  7. காங்கேயம்
    சிறுமிக்கு பாலியல் தொல்லை; குண்டா் சட்டத்தில் 8 போ் கைது
  8. நாமக்கல்
    நாமக்கல்லில் முட்டை விலை உயர்வு!
  9. மேட்டுப்பாளையம்
    அன்னூரில் மழை வேண்டி கழுதைகளுக்கு திருமணம் செய்து வைத்த கிராம மக்கள்
  10. திருப்பூர்
    திருப்பூர்; மாணவா்களுக்கு கோடைகால கலைப் பயிற்சி முகாம்