மாவட்ட வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்க உள்ளாட்சி பிரதிநிதிகளுக்கு ஆட்சியர் வேண்டுகோள்

மாவட்ட வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்க உள்ளாட்சி பிரதிநிதிகளுக்கு ஆட்சியர் வேண்டுகோள்
X

ஆய்வுக் கூட்டத்தில் மாவட்ட ஆட்சித் தலைவர் முருகேஷ்.

Tiruvannamalai Collector News Today -பெண் ஊராட்சி மன்ற தலைவர்கள் உள்ள ஊராட்சியில் அவர்களுடைய கணவர், மகன்கள் தலைவர் செய்யக்கூடிய வேலைகளை செய்வதாக புகார்கள் வருகின்றன.

Tiruvannamalai Collector News Today - திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டு ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் மாவட்ட ஊரக வளர்ச்சித் துறையின் சார்பில் செயல்படுத்தப்பட்டு வரும் அனைத்து திட்டப் பணிகள் முன்னேற்றம் குறித்து வட்டார அளவிலான ஆய்வு கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் முருகேஷ் தலைமையில் நடைபெற்றது.

தண்டராம்பட்டு ஊராட்சி ஒன்றியத்தில் 47 கிராம ஊராட்சிகளில் ஊரக வளர்ச்சித் துறை மூலம் நடைபெற்று வரும் அனைத்து திட்டப் பணிகளின் முன்னேற்றம் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் ஆலோசனை நடத்தினார்.

ஊராட்சிகளுக்கு மத்திய அரசு, மாநில அரசு மூலம் ஒதுக்கக்கூடிய பசுமை வீடு திட்டம், இந்திரா காந்தி குடியிருப்பு திட்டம், தனிநபர் கழிவறை, உறிஞ்சி குழி ஆகிய பணிகளுக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஒதுக்கப்பட்ட பணிகளை இதுவரை செய்யாமல் உள்ள ஊராட்சி மன்ற தலைவர்களிடம் தனித்தனியாக ஏன் பணிகள் செய்யவில்லை என்று கேள்வி எழுப்பினார். பின்னர் ஆட்சியர் தனித்தனியாக உங்கள் ஊருக்கு ஒதுக்கப்பட்டுள்ள வீடுகள் எத்தனை? இன்னும் 2 மாதத்தில் எத்தனை வீடுகள் கட்டி முடிக்கப்படும் என்று கேட்டறிந்தார்.

அதைத்தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் பேசியதாவது:

அரசு ஒதுக்கக்கூடிய நிதியை சரியான முறையில் பயன்படுத்தி பணிகள் செய்யும் ஊராட்சிகளை தேர்வு செய்து சிறந்த ஊராட்சிக்கான விருது வழங்கப்படும். பெண் ஊராட்சி மன்ற தலைவர்கள் உள்ள ஊராட்சியில் அவர்களுடைய கணவர், மகன்கள் தலைவர் செய்யக்கூடிய வேலைகளை செய்கிறார்கள் என்று புகார்கள் வருகின்றன. அப்படி இல்லாமல் பெண் தலைவர்கள் அவர்களுக்கு ஒதுக்கப்பட்டு உள்ள பணிகளை அவர்களே செய்ய வேண்டும்.

படிக்கத் தெரியாத தலைவர்கள் படிக்கத் தெரிந்த ஒருவரிடம் கேட்டு தெரிந்து கொண்டு ஆவணங்களில் கையெழுத்து போட வேண்டும். பஞ்சாயத்து சட்டம் என்றால் என்ன என்று உங்களுக்கு வழங்கி உள்ள புத்தகத்தில் உள்ளது. ஒவ்வொரு தலைவரும் இந்த புத்தகத்தை படித்து தெரிந்து கொள்ள வேண்டும். வீடு கட்டுவதற்கு உண்டான ஆணையை வழங்கி இதுவரை வீடுகட்டாமல் இருக்கும் பயனாளிகளிடம் ஊராட்சி மன்ற தலைவர்கள் அறிவுரை வழங்கி வீடு கட்டுவதற்கு வழிவகை செய்ய வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

பிரதம மந்திரி வீடுகள் வழங்கும் திட்டம், அனைத்து கிராம மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் செயல்பட்டு வரும் பணிகள், முன்மாதிரி கிராம வளர்ச்சித் திட்டம், உறிஞ்சி குழாய் பணிகள், பண்ணைக்குட்டைகள் அமைத்தல், ஆகிய பணிகளை கிராமப் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சம்பந்தப்பட்ட ஊராட்சி தலைவர்கள் இப் பணியை விரைந்து முடிக்க வேண்டும் உத்தரவிட்டார்.

கிராமங்களில் தண்ணீர் தட்டுப்பாட்டை தவிர்க்க புதிய ஆழ்துளை கிணறு அமைக்கும் பணி, பைப்லைன் அமைத்தல், பக்க கால்வாய் அமைக்கும் பணியை விரைந்து முடிக்க அதிகாரிகளிடம் கேட்டுக் கொண்டார்.

அரசின் மூலம் செயல்படுத்தப்படும் அனைத்து பணிகளையும் விரைந்து முடிக்குமாறும் ஒன்றிய குழு தலைவர்கள் ஊராட்சி மன்றத் தலைவர்கள் உள்ளாட்சி பிரதிநிதிகள் அனைவரும் ஒன்றிணைந்து அரசு செயல்படுத்தி வரும் திட்டங்கள் பணிகளை சிறப்பான முறையில் மேற்கொண்டு மாவட்டத்தின் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்க வேண்டும் என்று மாவட்ட ஆட்சித்தலைவர் கேட்டுக்கொண்டார்.

கூட்டத்தில் தண்டராம்பட்டு ஒன்றியக்குழு தலைவர் பரிமளா கலையரசன், துணைத்தலைவர் பூங்கொடி, உதவி இயக்குனர் ஊராட்சிகள் சரண்யா தேவி, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் நிர்மலா, மகாதேவன், மேலாளர் கோவிந்தராஜ் உள்பட அரசு அலுவலர்கள், ஊராட்சி மன்ற தலைவர்கள், ஊராட்சி செயலாளர்கள் கலந்து கொண்டனர்.

அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Tags

Next Story
future ai robot technology