செங்கம் மருத்துவ வட்டார அதிகாரிகளுக்கு ஆட்சியர் முருகேஷ் பாராட்டு

செங்கம் மருத்துவ வட்டார அதிகாரிகளுக்கு ஆட்சியர் முருகேஷ் பாராட்டு
X

செங்கம் மருத்துவ வட்டார அதிகாரிகளுக்கு பாராட்டு தெரிவித்த ஆட்சியர் முருகேஷ்.

50 ஆயிரம் பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தி மாவட்டத்தில் முதலிடத்தில் உள்ள செங்கம் மருத்துவ வட்டத்திற்கு ஆட்சியர் பாராட்டு.

திருவண்ணாமலை மாவட்டத்தில் 50 ஆயிரம் பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தி செங்கம் மருத்துவ வட்டாரம் முதலிடத்தில் உள்ளது. செங்கம் மருத்துவ வட்டார அதிகாரிகளுக்கு ஆட்சியர் முருகேஷ் பாராட்டு தெரிவித்து உள்ளார்.

கொரோனா தடுப்பூசி, கொரோனா நோய் தொற்று தடுப்பு நடவடிக்கைகள் திருவண்ணாமலை மாவட்டத்தில் தீவரமாக கண்காணிக்கப்பட்டு வருகின்றன. திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர் தலைமையில் அவ்வப்போது ஆய்வுக் கூட்டங்கள் நடத்தப்பட்டு பொதுமக்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்துகின்றனர். மேலும், நோய் தொற்றினை தடுக்கும் விதமாக அரசு அவ்வப்போது வழங்கி வரும் கட்டுப்பாடுகளை அமல்படுத்துதல், கண்காணித்தலால் நோய் தொற்று பெருமளவில் குறைக்கப்பட்டு உள்ளது.

இந்த நோய் தொற்று தடுப்பு நடவடிக்கைகளின் மிக முக்கிய அம்சமாக விளங்கும் கொரானா நோய் தடுப்பூசி செலுத்துதல் பணியும் மிகுந்த அக்கறையோடு மேற்கொள்ளபட்டு வருகிறது. இந்த குழுவிற்கு தலைமை தாங்கிய இணை இயக்குனர் ஊராட்சிகள் லட்சுமி நரசிம்மன் மற்றும் இந்த சிறந்த பணியில் ஈடுபட்ட செங்கம் வட்ட அனைத்து அதிகாரிகளுக்கும், ஊழியர்களுக்கும், பொது மக்களுக்கும் தனது பாராட்டுகளையும் நன்றியையும் தெரிவித்தார்.

Tags

Next Story
ரயில் முன்பதிவில் மோசடி: பாதுகாப்பு படையினர் தீவிர விசாரணை!